வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றுள்ளது.  இன்று காலை  5 மணி அளவில்  சென்னைக்கு  தென்கிழக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இது அடுத்த 12 மணி நேரத்தில்  மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து  நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.


பின்னர் 3 ஆம் தேதி வங்கக்கடலில்  புயலாக வலுப்பெறக்கூடும். நேற்றைய தினம் புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து  தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோர பகுதிகள்  சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே  4 ஆம் தேதி மாலை  புயலாக கரையை கடக்க கூடும்  சென்னை வானிலை ஆய்வு மையம்.




புயல் செல்லும் பாதை:


இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் மழை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புயலாக கரையை கடக்குமா? தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாறுமா என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் தற்போது வரை இந்த புயல், புயலாக தான் கரையை கடக்கக்கூடும் என்றும் அதி தீவிர அல்லது தீவிர புயலாக மாறும் வாய்ப்புகள் குறைவு தான் என கணிக்கப்பட்டுள்ளது.


முதலில் இந்த புயல் வடக்கு நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது வங்கதேசம் நோக்கி செல்லும் என பல்வேறு மாதிரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புற காரணிகளால் அதாவது கடலில் இருக்கும் பிற பகுதிகளில் இருக்கும் அழுத்தம் போன்ற புற காரணிகளால் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து வடமேற்கு திசையில் பயணித்து சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேரடியாக மழை கொடுக்கும் என கூறப்படுகிறது.


மேலும், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் அட்சரேகை 9.1°க்கு அருகில் நிலவி வருகிறது. மேலும் தீர்க்கரேகை 86.4°E, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 790 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ., பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 990 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.