Entertainment Headlines Aug 15:


மகேந்திரன் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகள்..


1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலம்  திரையுலகில் இயக்குநராக மகேந்திரன் அறிமுகமாகிறார். உமா சந்திரன் எழுதிய  முள்ளும் மலரும் நாவலை அடிப்படையாக கொண்டு முள்ளும் மலரும் படத்தை இயக்கிநார் மகேந்திரன். பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் எதார்த்த சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளங்களை கொண்டிருந்தபோதிலும் அவர்களிடம் இருந்து தனித்து நின்றார் மகேந்திரன் . முள்ளும் மலரும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த முழுமை அவனுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் தனது தங்கையை தனக்கு பிடிக்காதவனாக இருந்தாலும் தனது தங்கைக்கு பிடித்திருப்பதால் சம்மதம் தெரிவிக்கிறான். முள்ளும் மலரும் படத்தின் க்ளைமேக்ஸ் ஒரு கதாபாத்திரம் சம்பிரதாயமாக இல்லாமல் எப்படி மனமாற்றம் அடைவதை சித்தரிக்க வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம்  மேலும் வாசிக்க..


 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.மேலும் வாசிக்க..


'சகலகலா டாக்டர்’ கமல்.. ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ 


கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் வெளியான படங்கள் காமெடியில் சக்கைப்போடு போடும். அப்படியான வரிசையில் வசூல் ராஜாவும் அமைந்தது. மருத்துவத்துறையில் இருக்கும் அவலங்களை இப்படம் தோலூரித்து காட்டியது. டைமிங் காமெடியில் ஒவ்வொருவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினர். மேலும் வாசிக்க..


தளபதி 68-ல் விஜய்யுடன் நடிக்கப் போகும் தல தோனி?


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்த சாதனையாளர்.விளையாட்டுத்துறை மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வந்த தோனி சென்னையை தலைமையிடமாக கொண்டு திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.மேலும் வாசிக்க,,


தமிழ் சினிமாவின் 'ரூட்டு தல' பா.ரஞ்சித் ..


இயக்குநர் ரஞ்சித் இயக்கியப் படங்களிலேயே இதுவரை சிறந்த படமாக கருதப்படுவது அட்டக்கத்திதான். மெட்ராஸ், காலா, சார்பட்ட உள்ளிட்ட காத்திரமான படைப்புகளை இயக்கியிருந்தாலும் இந்தப் படங்களில் பேசப்பட்ட அரசியலைவிட அட்டகத்தியில் படத்தின் வாழ்வியல் ஏற்படுத்திய தாக்கம் பெரிதானது என்று சொல்லலாம்.ஏன் மற்றப் படங்களைவிட அட்டகத்தி முக்கியமான படமாக மாறுகிறது தெரியுமா. ஆரம்பத்தில் குறிப்பிட்டப் படங்களில் அடிமைகளாக மட்டுமே காட்டப்பட்ட அதே மக்கள்தான் அட்டகத்தியின் கதை நாயகர்கள். அந்தப் படங்களைவிட அட்டக்கத்தி மாறுபட்டு தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னத் தெரியுமா? இது அடிமைகள் இல்லாத ஒரு கதை. 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் அட்டக்கத்திக்கும் அதை உருவாக்கிய பா.ரஞ்சித்திற்கும் வாழ்த்துக்கள்மேலும் வாசிக்க..


55-வது வயதில் இந்திய குடிமகன் ஆனார் நடிகர் அக்‌ஷய் குமார்..


பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றிதழை பெற்றுவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஞ்சாபில் பிறந்து ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா என்ற இயற்பெயர் கொண்ட அக்‌ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். பல்வேறு தேசப்பற்று மொழிகளிலும் நடித்துள்ளார். 55 வயதான அக்‌ஷய் குமார் நடிப்பில் அண்மையில் 'ஒஎம்ஜி 2' என்ற பெயரிலான திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.மேலும் வாசிக்க..


90s கிட்ஸா 2k கிட்ஸா.. எது பெருசுன்னு அடித்துக்காட்டிய பிரதீப்.


ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , சம்யுக்தா ஹெட்கே, யோகி பாபு, கே. எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமாகிய படம் கோமாளி. இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.மேலும் வாசிக்க..


ராக்கெட்டாக சீறும் ஜெயிலர் வசூல்


பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. அதோடு இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.மேலும் வாசிக்க..


‘தலைவரு நிரந்தரம்’ .. சினிமாவில் 48 ஆண்டு


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து மீண்டும் பாலசந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார் ரஜினி. வில்லத்தனமான அவரது கேரக்டர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்திலும் வில்லனாக நடித்தார். ஆனால் ஹீரோவான பிறகு ரஜினி செய்த மேஜிக் எல்லாம் வேற ரகம்.மேலும் வாசிக்க..


‘தேசப்பற்று நாயகன்’ அர்ஜூன் பிறந்தநாள் இன்று


தமிழ் சினிமாவில் தேசத்தை காக்கும் தொடர்பான படங்களில் நடித்தவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜூன். அவர் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் சினிமா பயணம் ஒரு ரீவைண்ட் செய்து பார்க்கலாம். நன்றாக சென்று கொண்டிருந்த அர்ஜூன் வாழ்வில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய்ஹிந்த்’ படம். அப்படத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்த அவரே, படத்தையும் இயக்கியிருந்தார். தேசப்பற்றை மையமாகக் கொண்ட ஜெய்ஹிந்த் படம் இன்றைக்கும் குடியரசு தினம், சுதந்திர தினம் அன்று மறக்காமல் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க..