விடைபெற்ற தேன் குரல்! பவதாரிணியின் உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம்!


கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடகி பவதாரிணி, நேற்று முன் தினம் மாலை உயிரிழந்தார். இலங்கையிலிருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டது. மேலும் படிக்க


எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை - கண் கலங்கிய ரஜினி!


தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிக பிரமாண்டமான முறையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா பல நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, “இந்த மேடை எங்க எல்லாருக்கும் முக்கியமான மேடை. கேமராமேன் விஷ்ணு தான் இந்த படத்தோட கதையை என்னிடம் சொன்னார். கதையை வைத்துக் கொண்டு படம் எடுக்க சிலரை சந்தித்தேன். மேலும் படிக்க


ஆரா அமுதே! மகள் பவதாரிணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா: நொறுங்கிப்போன பாரதிராஜா


புற்று நோயினால் உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடலுக்கு பவதாரிணியின் தந்தையும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா தனது கடைசி அஞ்சலியை செலுத்தினார். தேனி பண்ணைப்புரத்தில் வைக்கப்பட்டுள்ள பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் படிக்க


நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா? - சந்தானம் விளக்கம்!


பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க


மாஸ் அப்டேட்.. கங்குவா படத்தில் பாபி தியோல் கேரக்டரை அறிமுகம் செய்த படக்குழு!


நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நடிகையாக தமிழில் அறிமுகமாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் படிக்க


“ரொம்ப அருவருப்பா இருக்கு” - ராதிகாவை அலறவிட்ட படம்.. எது தெரியுமா?


அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய நினைக்கிறேன். ரொம்ப கோபமா வருது” என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ரன்பீர் கபூர் நடித்த “அனிமல்” படத்தை பார்த்தீர்களா? என வரிசையாக கேள்வியெழுப்பி வருகின்றனர். அதில் ஒரு சிலர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் நடிப்பை பற்றி பேசலாமா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க


விஜய் எனக்கு போட்டியா? - மரியாதையே இருக்காது .. கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்!


லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் உடனான சர்ச்சை பற்றி பேசினார். அதாவது, “ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழால் நான் காக்கா - கழுகு கதை சொன்னது வேற மாதிரி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. நான் விஜய்யை சொன்ன மாதிரி போய்டுச்சு. அது எனக்கு நிஜமாகவே வருத்தமா இருந்துச்சு. விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன். அவர் வீட்டுல தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் போய்ட்டு இருந்துச்சு. மேலும் படிக்க