Joju George: இயக்குநராக களமிறங்கும் தனுஷ் பட வில்லன் ஜோஜூ ஜார்ஜ்! ரிலீசானது ஃபர்ஸ்ட் லுக்!


மலையாள நடிகர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் ஜோஜூ ஜார்ஜ் . ஹீரோ, வில்லன், காமெடி என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் தன்னை கச்சிதமாக பொருத்தி நடிக்கக்கூடிய திறனுள்ளவர். ஜெகமே தந்திரம் படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்துள்ளார். ஜோசப் , நயட்டு  , சோழா , இரட்டா  போன்ற பல சிறப்பான படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப்  மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க


Pradeep Ranganathan: இது சரியான காம்போவா இருக்கே! லவ் டுடே இயக்குநருடன் இணையும் பிரேமலு நடிகை!


கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் எல்.ஐ.சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். மேலும் படிக்க


TVK Vijay: மீண்டும் எஸ்.ஏ.சி உடன் இணைந்த விஜய்; குதூகலத்தில் த.வெ.க., தொண்டர்கள்!


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் தனது பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை இன்று அதாவது மே மாதம 27ஆம் தேதி சந்தித்தார். இது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இன்று தனது பெற்றோர்களைச் சந்தித்துள்ளார்.மேலும் படிக்க


Silambarasan : தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் சிம்பு! வைரலாகும் STR கெட்டப்!


குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தொடர் தோல்விகளோ , தனிப்பட்ட பிரச்சனைகள் பல இருந்தும் அவற்றை எதிர்கொண்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் மாஸான கம்பேக் கொடுத்தார். மேலும் படிக்க


Coolie: ரஜினிக்கு நண்பன்! சல்மான் கானுக்கு வில்லன்! சத்யராஜ் எடுக்கப்போகும் புது அவதாரம்!


வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். கிட்டதட்ட 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு , மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். காலத்திற்கு ஏற்றார் போல் அடுத்த தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க


Ajith Kumar: ”கண்ணுபட போகுதுங்க” நியூ லுக்கில் மிரட்டும் அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்!


நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்குமாரின் நியூ லுக் ஃபோட்டோவை வெளியாகியுள்ளது. இதில் அஜித்குமார் காதில் கடுக்கன் அணிந்து கொண்டு, அழகாக இருப்பது மட்டும் இல்லாமல், மாஸாகவும் இருப்பதால் ரசிகர்கள் புகைப்படத்தை இணையத்தில் வைராலாக்கி வருகின்றனர். மேலும் படிக்க


Fahadh Faasil : ஃபகத் ஃபாசிலுக்கு இந்த பாதிப்பு.. தகவல் பகிர்ந்த நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்


சமீபத்தில் வெளியான ஆவேஷம் படத்தில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது ஏ.டி,எச்.டி என்கிற கவனக்குறைவு பாதிப்பு இருப்பதாக ஃபகத் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க


Vairamuthu: நான் சர்ச்சைகளுக்கு பிறந்தவன் அல்ல.. செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான வைரமுத்து!


ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோரோடு புதுமுகங்கள் நடித்துள்ள படம் “பனை”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இசைத்தட்டை வெளியிட்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “தயவு செய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். பாமர மக்கள் தமிழை விரும்பும் நிலையில் சினிமாவுலகினர் அவர்களிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார். மேலும் படிக்க