பிரதீப் ரங்கநாதன்


கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் எல்.ஐ.சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார்.


எல்.ஐ.சி படத்தைத் தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கும் டிராகன் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரதீப். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தைப் பற்றிய முக்கியமான  தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜூ


சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பிரேமலு படத்தின் மூலம் தென் இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதை கவர்ந்த மமிதா பைஜூ இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 






பிரேமலு படத்தில் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ தற்போது சென்சேஷனலான நடிகையாக வலம் வருகிறார். முன்னதாக பாலாவின் வணங்கான் படத்தில் மமிதா நடிக்க இருந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகினார், இதனைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளியான ரெபல் படத்தில் நாயகியாக நடித்தார்.


ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. எந்த விதமான முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த சரியான ஒரு ஓப்பனிங் மமிதா பைஜூவுக்கு இதுவரை அமையவில்லை. இப்படியான நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் வழங்கப்பட்டு எல்லாரும் எதிர்பார்க்கு ஒரு சிறப்பான ஓப்பனிங் அவருக்கு இப்படத்தில் கிடைக்கும் என்று  நம்பலாம்