Coolie: ரஜினிக்கு நண்பன்! சல்மான் கானுக்கு வில்லன்! சத்யராஜ் எடுக்கப்போகும் புது அவதாரம்!

ரஜினிகாந்த், சல்மான் கான் என இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார்.

Continues below advertisement

சத்யராஜ்

வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். கிட்டதட்ட 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு , மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். காலத்திற்கு ஏற்றார் போல் அடுத்த தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Continues below advertisement

ஒவ்வொரு மாதத்தில் வெளியாகும் ஒரு படத்தில் சத்யராஜை நாம் பார்த்து விடலாம் என்கிற அளவுக்கு அவர் பிஸியாக இருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு மாறிய பிறகு நண்பன் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ராஜா ராணி  , சிகரம் தொடு , பூஜை , பாகுபலி , மெர்சல்  , கடைக்குட்டி சிங்கம் , கனா , வீட்ல விசேஷம் , லவ் டுடே , சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்து புதுப்புது கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். இப்படியான நிலையில் சத்யராஜ் நடிக்க இருக்கும் இரண்டு முக்கியமான படங்கள் குறித்த அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி. சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் . இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் ,மிஸ்டர் பரத்,  பாயும் புலி உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் சத்ய்ராஜ் . தற்போது இந்த முறை ஒரு மாற்றத்துக்கு ரஜினிக்கு நண்பனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து ரஜினி மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத் தக்கது

சிகந்தர்

ரஜினிகாந்த் தவிர்த்து சத்யராஜ் இணைய இருக்கும் மற்றொரு பெரிய ஸ்டார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் சல்மான் கான் நடிப்பில் இயக்க இருக்கும் சிகந்தர் படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக மற்றோரு தகவல் வைரலாகி வருகிறது. தமிழில் பல ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டிய சத்ரயராஜ் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானுக்கு எப்படி ஈடு கொடுக்க போகிறார் என்பது சுவாரஸ்யம் தான்.

Continues below advertisement
Sponsored Links by Taboola