நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்குமாரின் நியூ லுக் ஃபோட்டோவை வெளியாகியுள்ளது. இதில் அஜித்குமார் காதில் கடுக்கன் அணிந்து கொண்டு, அழகாக இருப்பது மட்டும் இல்லாமல், மாஸாகவும் இருப்பதால் ரசிகர்கள் புகைப்படத்தை இணையத்தில் வைராலாக்கி வருகின்றனர். 


நடிகர் அஜித் (Ajith Kumar) தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இதற்காக 700 நபர்களைக் கொண்டு மூன்று பிரம்மாண்ட செட் அமைக்கப் பட்டது. படப்பிடிப்பு துவங்கிய கையோடு அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்த போஸ்டர் ஒரே நாளில் 4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்தது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.






ரஷ்யாவில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு


ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து ரஷ்யா கிளம்பி செல்ல இருக்கிறது படக்குழு. முதல்கட்ட படப்பிடிப்பி அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகிவிட்டதால் படப்பிடிப்பை முழூவீச்சி நடத்தி வருகிறார்கள். 


விடாமுயற்சி


மறுபக்கம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சிறிது இடைவெளி விட்டு தொடங்க இருக்கிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா  , அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை  நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது .