சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) இன்றைய (மே 28) எபிசோடில் ஸ்ருதியின் அம்மா மனோஜ் கடையில் வாங்கிய ஏசியை திருப்பி கொடுத்ததால் அவருக்கு பணத்தை திருப்பி தருவதற்காக தன்னுடைய தாலியை அடமானம் வைத்து பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறாள் ரோகிணி. "இது அனைத்துக்கும் முத்து தான் காரணம். அன்னைக்கு மீனா வாங்கின பொருளுக்கு முதலில் பில் போடக்கூடாதுன்னு ஆண்ட்டி சொன்னாங்க, அதை மனசுல வைச்சுக்கிட்டு தான் முத்து இப்படி பழி வாங்கி இருக்கிறார்" என ரோகிணி சொல்ல அதைக்கேட்டு மனோஜ் டென்ஷனாகிறான்.
முத்து மீது பழி:
வீட்டுக்கு சென்று அனைவரிடமும் சொல்ல முத்து செய்தது தான் தவறு என எல்லா பழியும் முத்துவின் மீது விழுகிறது. "நீ செய்தது தப்பு தான். யார் கிட்டேயும் சொல்லாமல் நீயாக முடிவெடுத்தது தான் இது எல்லாத்துக்கும் காரணம்" என அண்ணாமலையே சொல்லிவிடுகிறார்.
முத்து வருத்தத்தில் இருக்க மீனா வந்து ஸ்ருதி அம்மா இப்படி செய்ததற்கான காரணம் பற்றி சொல்கிறாள். "வீட்ல பிரச்சினை வரணும் என்று தான் அவங்க இப்படி பண்ணாங்க. அவங்க குணமே அது தான். அவங்க நினைச்சது போலவே நீங்க பண்ணிடீங்க. தனியா முடிவெடுத்தது தான் இந்த பிரச்சினை வர காரணமே" என்கிறாள் மீனா. "உனக்கும் இதெல்லாம் தெரியுமா மீனா" என ஆச்சரியமாக கேட்கிறான் முத்து.
ஸ்ருதி மகிழ்ச்சி:
ரவியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "முத்து செய்தது தப்பு தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள என்ன பொருள் வரணும் வரக்கூடாதுன்னு முடிவெடுக்க வேண்டியது உங்க அம்மா இல்ல. இதை நான் வெளில எல்லார் முன்னடியும் இதை சொல்லி அவங்களை விட்டுக்கொடுக்க முடியாது" என சொல்லவும் ஸ்ருதி ரவியை நினைத்து சந்தோஷப்படுகிறாள்.
விஜயா அண்ணாமலையிடம் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவது பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். "மீனா தான் முத்துவுக்கு சாவி கொடுத்து இப்படி எல்லாம் பண்ண வைக்குறா. ரோகிணிக்கு ஒரு தாலி செயின் வாங்கி தரணும்" என விஜயா சொல்ல "மீனாவும் மஞ்ச கயிறு தான் போட்டுக்கிட்டு இருக்கா" என்கிறார் அண்ணாமலை. "அவளும் என்னோட மருமகளும் ஒண்ணா" என விஜயா மீனாவை அசிங்கப்படுத்துகிறாள். "அவங்களால தான் இந்த வீட்ல பிரச்சினை வருது. அவங்களை முதல வீட்டை விட்டு வெளியில் அனுப்பனும் என சொல்கிறாள் விஜயா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.