ஜோஜூ ஜார்ஜ்


மலையாள நடிகர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் ஜோஜூ ஜார்ஜ் . ஹீரோ, வில்லன், காமெடி என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் தன்னை கச்சிதமாக பொருத்தி நடிக்கக்கூடிய திறனுள்ளவர். ஜெகமே தந்திரம் படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்துள்ளார். ஜோசப் , நயட்டு  , சோழா , இரட்டா  போன்ற பல சிறப்பான படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப்  மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் அனுராக் காஷ்யப் இயக்கிவரும் படத்திலும் நடித்து வருகிறார். ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகராக இடம்பிடித்த  ஜோஜூ ஜார்ஜ் தற்போது தனது முதல் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


பனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்






ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள இயக்கியிருக்கும் பனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரன்மாயி, சோனா மரியா ஏப்ரஹம் , மெர்லட் ஆன் தாமஸ் , லங்கா லக்‌ஷ்மி , சாரா ரோஸ் ஜோசப் , பாபு நம்புதிரி , பிரஷாந்த் அலெக்ஸாண்டர் , சுஜித் சங்கர் , ரஞ்சித் வேலாயுதன் , பிட்டோ டேவிஸ் , ரினோஷ் ஜார்ஜ் , அயன் , இவன் , அம்பு  , ரமேஷ் கிரிஜா , டானி ஜான்சன் , பாபி குரியன் , சாகர் , ஜுனைஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.


வேணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மனு ஆண்டனி படத்தொகுப்பு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். பனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தக் லைஃப் படத்தின் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லர் டிராமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தக் லைஃப்


மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது . சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவருக்குமான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தபடியாக டெல்லியில் படப்பிடிப்பு தொடர இருக்கிறது . ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.