மேலும் அறிய

Valimai Ajith : அம்மா, அப்பாவுக்காக இதை செய்யப்போறேன்னு சொன்னார் அஜித் : வலிமை இயக்குநர் சொன்ன சீக்ரெட்

தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.

‘வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார் என்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறினார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘வலிமை. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு  பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் எச்.வினோத்.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வலிமை வெறும் ஆக்‌ஷன் படம் அல்ல என்றும் கூறுகிறார் இயக்குநர். 

படம் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு எச்.வினோத் அளித்த பேட்டியில், “வலிமை ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இது சமூக பிரச்சினைகளையும் பேசுகிறது. குடும்பப் படம் என்று சொல்லும்போது, ​​குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல, அது ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, அது எப்படி ஒரு குற்றத்தில் விளைகிறது, ஹீரோ எப்படி அந்தக் குற்றத்தை தன் குடும்பத்தைச் சிதைக்காமல் தடுக்க முயல்கிறார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்” என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு தங்கள் திட்டங்களை சீர்குலைத்தாலும், இந்த வழியில் சில நன்மைகள் நடந்துள்ளது. நாங்கள் படத்தை தீபாவளிக்கு வெளியிட விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு, டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீஸ் என்று நினைத்தோம், அதையும் செய்ய முடியவில்லை. உண்மையில், கொரோனாவின் ஒவ்வொரு அலையும் எங்களுக்கு வெவ்வேறு சிக்கல்களைக் கொண்டு வந்தன. ஆனால் தாமதங்கள் மேலும் இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட எங்களுக்கு உதவியது என்று நான் உணர்கிறேன். நடிகர்கள் தேர்வு நேரத்தில் கூட, படக்குழு படத்தை ஒரு பான்-இந்தியா படமாக திட்டமிட்டது. 
OTT பிளாட்ஃபார்ம்கள் வெற்றி பெறுவதால், நீங்கள் திரையரங்குகளில் வெளியிடாவிட்டாலும் கூட, உங்கள் படம் ஒரு இந்தியப் படமாக மாறும் சாத்தியம் உள்ளது.  ஏனெனில் அவர்கள் படத்தை பல மொழிகளில் டப் செய்கிறார்கள்” என்று கூறினார்.


Valimai Ajith : அம்மா, அப்பாவுக்காக இதை செய்யப்போறேன்னு சொன்னார் அஜித் : வலிமை இயக்குநர் சொன்ன சீக்ரெட்

படம் குறித்து அஜித் என்ன கூறினார் என்பது குறித்து எச்.வினோத் கூறுகையில், 
“அஜித் சார் என்னிடம், இந்தப் படத்தை செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார். இந்த படத்தை செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை எடுத்த பிறகு நான் ஒரு பெருமைமிக்க மகன் போல் உணர்கிறேன் என்பதால், இந்த படத்தை என் அம்மா மற்றும் அப்பா மற்றும் என் குடும்பத்தினருக்கு திரையிடப் போகிறேன்.  இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.

போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget