மேலும் அறிய

Cool Suresh: ‛வெந்து தணிந்தது காடுக்கு மொத்தமாக வணக்கம் போட்ட கூல் சுரேஷ்’ காரணம் இது தான்!

மாநாடு படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலை வைத்து கூல் சுரேஷ் ஒவ்வொரு பதிவிலும் “தானே தலைவன் எஸ்.டி.ஆரின் மாநாடு...எல்லாரும் கொஞ்சம் வழியவிடு” என தெரிவித்திருந்தார். 

இனிமேல் வெந்து தணிந்தது காடு என சொல்லமாட்டேன் என நடிகரும், சிலம்பரசனின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானர் நடிகர் கூல் சுரேஷ். தொடர்ந்து பல படங்களில் காமெடி, ரவுடி, அடியாள் வேடத்தில் நடித்து வந்த அவர் சந்தானம் காமெடியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானார். இவர் நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் கூல் சுரேஷை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் காணலாம். 

படம் பார்த்து விட்டு அவர் சொல்லும் கமெண்டுகளை கேட்கவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி திரைக்குப் பின்னால் கூல் சுரேஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட காரணம் அவர் சொல்லும் வசனம் தான். கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் இயக்கத்தில் மாநாடு படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலை வைத்து கூல் சுரேஷ் ஒவ்வொரு பதிவிலும் “தானே தலைவன் எஸ்.டி.ஆரின் மாநாடு...எல்லாரும் கொஞ்சம் வழியவிடு” என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்க வெந்து தணிந்தது காடு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. உடனே படத்தின் தலைப்பை கொண்டு, “ வெந்து தணிந்தது காடு... என் தலைவன் சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு” என கிடைக்கும் கேப்பில் எல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்தார். அவரின் இந்த டயலாக் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு, கௌதம் மேனனுக்கு கார், பைக் என பரிசளித்து மகிழ்ந்தார். 

ஆனால் முதலில் இருந்தே படத்தை ப்ரோமோஷன் செய்தது கூல் சுரேஷ் தான். அவரை கௌரவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்ததை தொடந்து ஐசரி கணேஷ் கூல் சுரேஷூக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்தார்.  பதிலுக்கு ஐசரி கணேஷூக்கு இரண்டு குச்சிமிட்டாயை பரிசாக கூல் சுரேஷ் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோவில், ஐசரி கணேஷ் தனது குழந்தைகளின் கல்வி செலவை முழுவதும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் முடிந்து அடுத்ததாக டிசம்பரில் சிம்பு நடித்த பத்து தல படம் வெளியாகிறது. இதனால் இந்த படத்திற்கு என்ன வசனம் கூல் சுரேஷ் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்தது.

இந்நிலையில் கூல் சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்திற்கு  சிம்புவின் ரசிகராக என்னால் முடிந்த சப்போர்ட்டை செய்தேன். எல்லாமே என் தலைவன் எஸ்.டி.ஆருக்காக தான். எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்கன்னு அந்த வசனம் நான் சொல்லல. இப்ப அடுத்ததாக பத்து தல படம் வருது. என்ன வசனம் சொல்லப்போறேன்னு எனக்கே தெரியல. ஆனால் நான் ஒன்னு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்றேன். என கூல் சுரேஷ் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Embed widget