![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Elections 2021| உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்த் முன்னிலை, குஷ்பு பின்னடைவு!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். ஆயிரம் விளக்கில் குஷ்பு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
![TN Elections 2021| உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்த் முன்னிலை, குஷ்பு பின்னடைவு! TN Elections 2021 udhayanidhi stalin leading in 2021 tn election results TN Elections 2021| உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்த் முன்னிலை, குஷ்பு பின்னடைவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/02/d92828a4dea6d41193b20a2cb46fa619_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 3,317 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். பாமக வேட்பாளர் இதுவரை வாக்குகள் எதுவும் பெறவில்லை.
ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் 3,330 வாக்குகளுடன் முன்னிலையிலும், பாஜக வேட்பாளர் குஷ்பு 1,357 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார்.
மேலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 3,654 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 1770 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)