மேலும் அறிய

TN Election 2026: மாலை மாற்றிய கையோடு ஓட்டுப் போட்ட தம்பதி: வைரலாகும் பொன்னேரி திருமண நிகழ்வு

TN Election 2026: இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், மறு வீட்டிற்கு கூட செல்லாமல் புதுமண தம்பதியினர் நேரடியாக தங்களது ஜனநாயக கடமையாற்ற வந்திருந்தனர்.

பொன்னேரி அருகே திருமணம் முடிந்த உடனே மறு வீடு கூட செல்லாமல் புதுமணத் தம்பதிகள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 70 சதவீகிதம் வாக்கானது பதிவாகியுள்ள்து. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிகப்பட்சமான வாக்குகள் பதிவாகியுள்ளது, 3 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டம் 76.43 சதவீத வாக்குப் பதிவுடன் முதல் இடத்தில் உள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 80 சதவீத வாக்காளர்கள், தங்களின் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக  61.91% வாக்குகளை மட்டுமே பதிவாகுயுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியன்வாயலை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுபாஷ், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரம்யா இருவருக்கும் காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்றது. இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், மறு வீட்டிற்கு கூட செல்லாமல் புதுமண தம்பதியினர் நேரடியாக தங்களது ஜனநாயக கடமையாற்ற வந்திருந்தனர்.

அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மணமகன் சுபாஷ் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்னை கொருக்குப்பேட்டைக்குச் சென்று ஜனநாயக கடமை ஆற்ற உள்ளதாகவும் அனைவரும் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மணமகன் சுபாஷ் கேட்டுக்கொண்டார். 

இதே போல மீஞ்சூரை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணிற்கும் நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் விஷால் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு நெய்தவாயல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அடுத்தடுத்து புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை  செலுத்திய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget