மேலும் அறிய

TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!

தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆடல் பாடல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் அதிக பணியால் ஓரளவு வருவாய் ஈட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 நாட்களில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான திமுக, தனக்கென தனி வாக்கு வங்கி வைத்துள்ள நாம் தமிழர், திரையுலக புகழ் மூலம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தவெக ஆகிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

பரபரப்புக்கும் தேர்தல் களம்:

தேர்தல் என்றாலே தமிழ்நாட்டில் விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது. பல கோடி செலவில் தேர்தல் ஆணையம் 234 தொகுதியிலும் இந்த தேர்தலை நடத்துகிறது. தேர்தல் என்றால் எந்தளவு பரபரப்பு இருக்கிறதோ, அதே அளவு இந்த தேர்தல் காரணமாக பல துறையிலும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ, இசைக்கலைஞர்களுக்கு வருவாய்:

அதாவது, அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரைக்காக ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு ஆட்டோ,  இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கரவாகனங்களை தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தொடர்ந்து உலா வர வைத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், அந்த தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவ்வாறு சுற்றி வரும் வாகன உரிமையாளர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும்.

இதுமட்டுமின்றி ட்ரம்ஸ், பறை வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கு தலைவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் வருகையின்போது பரப்புரைக்கு உடன் செல்வதால் அதன்மூலம் அவர்களுக்கு வழக்கமான வருவாயைக் காட்டிலும் அதிகளவு வருவாய் கிடைக்கிறது. இதற்காக பல இசைக்கலைஞர்களும் சில அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.

நாடக நடிகர்கள், ஆடல் பாடல் குழு, மிமிக்ரி கலைஞர்கள்:

இதுமட்டுமின்றி மேடை நாடக நடிகர்கள், ஆடல் பாடல் குழுவினர், மிமிக்ரி கலைஞர்கள் பலருக்கும் இந்த தேர்தல் பரப்புரையின்பாேது அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்காகவும் அந்தந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் போல வேடம் அணிந்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், அண்ணாதுரை, விஜயகாந்த், விஜய் போன்ற ஒவ்வொரு கட்சியின் அரசியல் தலைவர்கள் வேடத்திலும் அவர்கள் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுதவிர, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி சில வேட்பாளர்கள் தங்களது கட்சியின் தலைவர்கள் நேரில் பேசுவது போன்று பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூ, பட்டாசு வியாபாரம்:

இதுதவிர, மாலைகள், தலைவர்கள் செல்லும் வழியெங்கும் பூக்கள் தூவி வரவேற்பு அளிப்பதற்காக பூ வியாபாரிகளிடமும் குறிப்பிட்ட தொகை அளவிற்கு பூக்களை அரசியல் கட்சியினர் வாங்கி வருகின்றனர். இதனால், அவர்களுக்கும் ஓரளவு வருவாய் அதிகரித்துள்ளது. மேலும், ஆங்காங்கே சுவர் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் செய்வதால் பெயிண்ட் தொழில் செய்பவர்களுக்கும், பிரசுரங்களை அச்சிடுவதால் பதிப்பகங்களுக்கும் நல்ல வருவாய் அதிகரித்துள்ளது.

தலைவ்ரகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் ஒவ்வொரு இடங்களுக்கும் பரப்புரைக்குச் செல்லும்போதும் அங்கு 

தேர்தலுக்கு பிறகும் தலைவர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இந்த துறையினருக்கு வருவாய் சில நாட்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget