மேலும் அறிய

வாக்கு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! மே 4-ல் யாருக்கு வெற்றி? விழுப்புரம் மாவட்ட முழு விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் 88.99 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வானூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகப்படியாக 91.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் : தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வானூர் சாதனை - விழுப்புரம் பின்னடைவு

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், வானூர் (தனி) தொகுதி 91.08 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நகர்ப்புறத் தொகுதியான விழுப்புரம் 86.60 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த சராசரி வாக்குப்பதிவு 88.99% ஆகும்.

செஞ்சி சட்டமன்றத் தொகுதி

மொத்த ஆண் வாக்காளர்கள் – 1,20,042, பெண் வாக்காளர்கள் – 1,22,596, மூன்றாம் பாலினத்தவர்கள் – 29. மொத்த வாக்காளர்கள் – 2,42,667. பதிவான வாக்குகள் – 2,14,789. மொத்த சதவீதம் – 88.51%.

மயிலம் சட்டமன்றத் தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,04,048, பெண் வாக்காளர்கள் – 1,04,949, மூன்றாம் பாலினத்தவர்கள் – 19. மொத்த வாக்காளர்கள் – 2,09,016. பதிவான வாக்கு – 1,87,504. வாக்குப்பதிவு சதவீதம் – 89.71%.

திண்டிவனம் சட்டமன்றத் (தனி) தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,07,496, பெண் வாக்காளர்கள் – 1,11,749, மூன்றாம் பாலினத்தவர்கள் – 11. மொத்த வாக்காளர்கள் – 2,19,256. பதிவான வாக்குகள் – 1,94,182. வாக்குப்பதிவு சதவீதம் – 88.56%.

வானூர் சட்டமன்ற (தனி) தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,02,719, பெண் வாக்காளர்கள் – 1,07,089, மூன்றாம் பாலினத்தவர்கள் – 16. மொத்த வாக்காளர்கள் – 2,09,824. பதிவான வாக்குகள் – 1,91,111. வாக்குப்பதிவு சதவீதம் – 91.08%.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,19,622, பெண் வாக்காளர்கள் – 1,26,201, மூன்றாம் பாலினத்தவர்கள் – 76. மொத்த வாக்காளர்கள் – 2,45,899. பதிவான வாக்குகள் – 2,12,939. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் – 86.60%.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,12,767, பெண் வாக்காளர்கள் – 1,16,199, மூன்றாம் பாலினத்தவர்கள் – 29. மொத்த வாக்காளர்கள் – 2,28,995. பதிவான மொத்த வாக்குகள் – 2,07,239. வாக்கு சதவீதம் – 90.50%.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி

ஆண் வாக்காளர்கள் – 1,21,983, பெண் வாக்காளர்கள் – 1,21,087, மூன்றாம் பாலினத்தவர்கள் – 35. மொத்த வாக்காளர்கள் – 2,43,105. பதிவான வாக்குகள் – 2,15,052. வாக்குப்பதிவு சதவீதம் – 88.46%.

வாக்கு எண்ணும் மையங்கள் எங்கே?

வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன:

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி: விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகள்.

காக்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி: விக்கிரவாண்டி மற்றும் வானூர் தொகுதிகள்.

திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரி: திண்டிவனம், மயிலம் மற்றும் செஞ்சி தொகுதிகள்.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' (Strong Room) எனப்படும் காப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே அந்தந்த கல்லூரி வளாகங்களைச் சுற்றி மாவட்ட காவல்துறை சார்பில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காப்பறைகளின் வாசலில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தமிழக ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி ஏந்தி 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்த வளாகமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget