மேலும் அறிய

TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!

"அதிமுக கூட்டணி அல்ல.. அது அமித்ஷா கூட்டணி!" - 234 தொகுதிகளிலும் காலி என பொன்முடி சாடல்!

விழுப்புரம் :அதிமுக கூட்டணி என்பது டெல்லி கூட்டணியாகவும் அமித்ஷா கூட்டணியாக இங்கே இருப்பதாகவும், அவர்கள் கூட்டணி 234 தொகுதிகளில் ஒன்றிலாவது வெற்றி பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியை அறிமுகப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, எதிர்க்கட்சிக் கூட்டணியைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

"ஒரே ஒரு தொகுதியிலாவது ஜெயிப்பார்களா?" - பொன்முடி கேள்வி

கூட்டத்தில் பேசிய பொன்முடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், எதிர்க்கட்சிக் கூட்டணியின் நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:

"தமிழகத்தில் தற்போது இருப்பது அதிமுக கூட்டணி அல்ல; அது டெல்லி கூட்டணி, அமித்ஷா கூட்டணி. இந்த அந்நியக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறுமா என்பதே பெரிய கேள்விக்குறிதான். மதம், ஜாதி கடந்து நாம் அனைவரும் திராவிடர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் தொகுதியாகத் திருக்கோவிலூரை மக்கள் மாற்றிக் காட்ட வேண்டும்."

மேலும், திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்றும் அவர் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார்.

"இது கொள்கை கூட்டணி; அது கொள்ளை கூட்டணி" - கௌதம சிகாமணி சாடல்

திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணி பேசுகையில், தற்போதைய கூட்டணியின் பலத்தை வியந்து பாராட்டினார். அவர் கூறியதாவது:

"வலுவான இந்தத் திராவிடக் கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது, வெற்றிக் கோட்டையை உறுதி செய்துள்ளது. 'இப்படை தோற்பின் எப்படை வெல்லும்' என்பதற்கு ஏற்ப நமது வெற்றி உறுதியானது. திமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கைக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் உருவானது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் கொள்ளைக் கூட்டணி மட்டுமே."

மேலும், தான் கள்ளக்குறிச்சி எம்.பி-யாக இருந்தபோது திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் இருவரும் போட்டியிடுவதால், இருவரும் கண்டிப்பாகச் சட்டமன்றத்திற்குள் நுழைவோம் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மயில் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் திமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget