மேலும் அறிய

TN Election Results 2026:மயிலாடுதுறை: மீண்டும் நிரூபிக்கப்படுகிறதா 'காங்கிரஸ் கோட்டை'? - வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை..!

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மீண்டும் ஒருமுறை காங்கிரஸின் வசமாகும் சூழல் தற்போது நிலவி வருகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம் மயிலாடுதுறை மீண்டும் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை என்பது நிருபிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணுவதுடன் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெறத் தொடங்கினார்.

மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதிலும், பிரதான போட்டி காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக பழனிச்சாமி இடையேதான் நிலவியது. குறிப்பாக, கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் இத்தொகுதியில் பெற்று வந்த செல்வாக்கு இந்த முறையும் தொடருவதை தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் காட்டுகின்றன.

காங்கிரஸ் கோட்டை - ஒரு வரலாற்றுப் பின்னணி

மயிலாடுதுறை தொகுதியைப் பொறுத்தவரை, அது பாரம்பரியமாகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், குறிப்பாக காங்கிரஸின் பலமான தளமாகக் கருதப்படுகிறது. கடந்த காலத் தேர்தல்களில் பலமுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் இருந்து வருகிறது.

இந்தத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. ஜமால் முகமது யூனுஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே, கூட்டணி கட்சிகளின் பலமான ஆதரவு மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் தீவிரப் பிரச்சாரம் அவருக்குச் சாதகமாக அமைந்தது.

முன்னிலைக்கான காரணங்கள்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வரும் தகவல்களின்படி, காங்கிரஸ் வேட்பாளரின் முன்னிலைக்குப் பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

1. கூட்டணி பலம்: திமுக, விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைந்த தேர்தல் பணி.

2. அரசின் நலத்திட்டங்கள்: ஆளுங்கட்சியின் மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள்.

3. வேட்பாளர் செல்வாக்கு: தொகுதி மக்களுடன் வேட்பாளர் கொண்ட பிரச்சாரம்.

எதிர்க்கட்சிகளின் நிலை

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 வது சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 5,837-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தவெக குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பிரித்துள்ள போதிலும், அது காங்கிரஸின் வெற்றியைப் பாதிக்கும் வகையில் இல்லை எனத் தெரிகிறது.

தொண்டர்கள் கொண்டாட்டம்

காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியேயும், மயிலாடுதுறை நகரத்தின் முக்கியப் பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் திரளத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

"மயிலாடுதுறை எப்போதும் காங்கிரஸின் கோட்டைதான் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதி செய்யும்" என உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் இறுதி முடிவு

மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டியுள்ளது. தற்போது பாதியைக் கடந்திருக்கும் நிலையில், ஜமால் முஹம்மது யூனுஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. எனினும், கிராமப்புற வாக்குகள் எண்ணப்படும்போது மாற்றங்கள் ஏதேனும் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஸமாலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது, மயிலாடுதுறையில் காங்கிரஸ் தனது கொடியை மீண்டும் ஒருமுறை கம்பீரமாகப் பறக்கவிடுமா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget