மேலும் அறிய

காங்கிரஸ், பாஜக, விசிக, பாமக நிலைமை என்ன? யாருக்கு அமைச்சரவையில் ஜாக்பாட்? கூட்டணி ஆட்சி தானா?

Tamil Nadu Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பாஜக, விசிக, பாமக போன்ற சிறிய கட்சிகளின் வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Tamilnadu Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று, தமிழக வெற்றிக் கழகம் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

பெரும்பான்மை பெறாத பிரதான கட்சிகள்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சுமார் 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 64 இடங்களில் முன்னிலை பெற்று ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக முதல்முறையாக களம் கண்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

கூட்டணி ஆட்சி தானா?

தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மையான 118 இடங்களை இன்னும் எட்டவில்லை. இதனால் 2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி கட்சிகளின் ஆதரவிலேயே ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு குறைந்தபட்சம் இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் அமைச்சரவையிலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்களிக்க வாய்ப்புள்ளதால், அந்த ஜாக்பாட் யாருக்கு அடிக்கப்போகிறது என்பதே தற்போது மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக, விசிக, பாமக போன்ற கட்சிகள் பெறப்போகும் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தேவைக்கு ஏற்ப இந்த கட்சிகளின் ஆதரவே, அடுத்த ஆளுங்கட்சியாக உருவெடுக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க உள்ளது.

காங்கிரஸ், பாஜக, விசிக, பாமக நிலைமை என்ன?

  • திமுக கூட்டணி சார்பில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய கட்சியான காங்கிரஸ், வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை இந்த 2021ம் ஆண்டு தேர்தலில் இந்த கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • அதிமுக கூட்டணி 27 தொகுதிகளில் போட்டியிட்ட மற்றொரு தேசிய கட்சியான பாஜக, ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவில்லை. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் இந்த கட்சி 4 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது
  • அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது
  • கடந்த முறை 4 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த விசிக, இந்த முறை 8 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

ஒருவேளை குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படின், அதிமுகவை தாண்டிய வாய்ப்பாக பாமக மற்றும் காங்கிரஸ் உள்ளது. எனவே, பாஜக இல்லாத அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பாரா? அல்லது வேறு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து விஜய் ஆட்சி அமைப்பாரா? என்பது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget