மேலும் அறிய

Watch Video | ஒரே சைக்கிள்... ஒரே துடைப்பம்... ஒரே குப்பை... ஒரே வேட்பாளர்... ஒரே வாக்காளர்... இப்படியும் பிரச்சாரமா?

‛அந்த நாள் முதல்... இந்த நாள் வரை... சைக்கிளை விடவில்லை....’ என்கிற வடிவேலு காமெடி போல, சைக்கிளில் சுற்றி பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர், வார்டை கலகலப்பாக்கி வருகிறார்

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், வேட்பு பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கும் நாளும் இன்றோடு நிறைவு பெற்றுவிட்டது. இன்று இறுதி வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு, நாளை முதல் விறுவிறு பிரச்சாரம் நடைபெற உள்ளது. 

எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை வேட்பாளர்களின் சேஷ்டைகள் தாங்க முடியவில்லை. வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கிறோம் என்கிற பெயரில், ஆளாளுக்கு போட்டி போட்டு ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருக்கிறது. சிலவை கவனிக்கப்பட்டாலும், பெரும்பாலானாவை கோமாளித்தனமாகவே உள்ளது. இப்போது நாம் பார்க்கப் போவதும் அதுமாதிரியான ஒரு பிரச்சாரம் தான்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் மணி என்ற தவமணி, வினோத பிரச்சாரம் ஒன்றை செய்து வருகிறார். ஒரே அரை சைக்கிள்(பார் கம்பி இல்லாத சைக்கிளை அப்படி தான் அழைப்பார்கள்) , அதில் அவர் மட்டும் பயணிக்கிறார். அதில் குப்பை பெருக்கும் ஒரு துடைப்பத்துடன் செல்கிறார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஒரு இடத்தில் குவிந்திருக்கும் குப்பையை பெருக்குகிறார். அதன் பின் அவ்வழியாக வரும் ஒரு வாக்காளரை வழி மறிக்கிறார். அவர் அந்த வார்டை சேர்ந்தவரா என்பது தெரியவில்லை. அவரிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.  

‛எனக்கு ஓட்டு போடுங்கம்மா... இங்கே குப்பையை கூட்டுவேன்... குடிதண்ணீர் தருவேன்... ரோடு போடுவேன்... தெருவிளக்கு வைப்பேன்....’ என வழக்கமான லிஸ்ட்களை பட்டியலிடுகிறார். அந்தம்மாவும், பொறுமையாக அனைத்தையும் கேட்கிறார். பின்னர், துண்டு பிரசுரம் ஒன்றை அந்த பெண்ணிடம் வழங்குகிறார். அதை வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். பிரசுரத்தை வாங்கும் அம்மாவுக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியிருக்கும், ‛இந்த குப்பை இத்தனை நாளா இங்கே தானே இருக்கு... இப்போ மட்டும் எதுக்கு சுத்தம் செய்யுறாரு...’ என்கிற அடிப்படை கேள்வி தான் அது.

என்ன செய்வது... இப்போது தானே தேர்தல் வருகிறது. ‛அந்த நாள் முதல்... இந்த நாள் வரை... சைக்கிளை விடவில்லை....’ என்கிற வடிவேலு காமெடி போல, சைக்கிளில் சுற்றி பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர், வார்டை கலகலப்பாக்கி வருகிறார் என்பது மட்டும் உண்மை. 

இதோ அந்த ஜாலி வீடியோ...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
Embed widget