மேலும் அறிய

Puducherry election 2026 : விறுவிறுப்பான வாக்குப்பதிவு நிறைவு - இயந்திரங்களில் முடங்கிய வேட்பாளர்களின் விதி!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் மிக அதிகப்படியாக 86.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 16-வது சட்டசபைக்கான பொதுத்தேர்தல் (ஏப்ரல் 9) மிக உற்சாகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் மிக அதிகப்படியாக 86.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை முதலே நீண்ட வரிசை

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு

முதலமைச்சர் ரங்கசாமி: புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது வழக்கமான பாணியில் இருசக்கர வாகனத்திலேயே சென்று வாக்களித்தார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி: காங்கிரஸ் மூத்த தலைவர் வி. நாராயணசாமி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உறுதி" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் நமச்சிவாயம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திருக்கனூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.

புதுமை: வாக்காளர்களை வரவேற்ற ரோபோ!

தேர்தல் ஆணையம் இந்த முறை வாக்காளர்களைக் கவர பல்வேறு புதுமைகளைப் புகுத்தியிருந்தது. புதுச்சேரியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாதிரி வாக்குச்சாவடியில், வாக்காளர்களை வரவேற்க 'ரோபோ' பயன்படுத்தப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது தவிர, முதியவர்களுக்கென சிறப்பு வரிசைகள் மற்றும் சாய்வுதள வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

பலப்பரீட்சை

இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் - திமுக (இந்தியா கூட்டணி) இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 30 தொகுதிகளில் போட்டியிடும் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தற்போது வாக்கு இயந்திரங்களில் (EVM) முடக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரியுடன் சேர்த்து கேரளா மற்றும் அசாம் மாநிலங்களிலும் இன்று தேர்தல் நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும், வரும் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் துளிகள்:

மொத்த வாக்காளர்கள்: 9.44 லட்சம்.

பெண் வாக்காளர்கள்: 5.00 லட்சம் (ஆண்களை விட பெண்கள் அதிகம்).

பாதுகாப்பு:

மாநில போலீசாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
Embed widget