மேலும் அறிய

Puducherry assembly election result: புதுச்சேரியில் ரங்கசாமி 'சிக்ஸர்'... விஜய்க்கு 'வெல்கம்'! காணாமல் போன காங்கிரஸ்...

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைகிறது. 5வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி. 

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைகிறது. 5வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி. 

புதுச்சேரியில் NDA ஆட்சி 

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களை வென்ற திமுக எதிர்க்கட்சியாகிறது. தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை வென்றுள்ளன. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவியது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அத்துடன் இடதுசாரிகள், விசிக தனித்து போட்டியிட்டனர். விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்டனர். கடும் குழப்பத்துடன் இண்டியா கூட்டணி இந்த தேர்தலை புதுச்சேரியில் சந்தித்தது.

5வது முறையாக மீண்டும் ரங்கசாமி முதல்வர் 

இந்நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது முதல் தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் இக்கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார்.

எதிர்கட்சியாகிறது திமுக 

திமுக 5 தொகுதிகள் வென்று எதிர்க்கட்சியாகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. தவெக 2 இடங்களிலும், தவெக கூட்டணிக்கட்சி நேயன் மக்கள் கழகம் 1 தொகுதியிலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர். 

இரண்டு தொகுதிகளில் ரங்கசாமி வெற்றி 

முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார். அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸை விட சரிந்த கட்சிகள்:

கடந்த முறை 10 இடங்களை வென்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் இம்முறை 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை ஆறு இடங்களில் வென்ற பாஜக 4 இடங்களிலும், ஆறு இடங்களில் வென்ற திமுக 5 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. இரு இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் இன்னும் சறுக்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

கடந்த முறை அனைத்து இடங்களிலும் தோற்ற அதிமுக இம்முறை ஒரு இடத்தில் வென்றுள்ளது. புதிதாக போட்டியிட்ட தவெக இரு இடங்களிலும், லஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும்! 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றி சான்றிதழ்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. புதுச்சேரியில் இரு தொகுதிகளில் தவெக வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில சிறப்பாக என்டிஏ அரசு ஆட்சி புரிந்தது. பல நலத் திட்டங்கள் செய்தோம். முதியோர், விதவைகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செய்ததை தேர்தல் மூலம் அங்கீகரித்துள்ளனர். அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். நன்றியோடு வாக்களித்துள்ளனர்.

என்டிஏ அரசு அமைய தேவையான இடங்கள் தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். மாநில அந்தஸ்தை தர தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் விஜய் பணியாற்ற வேண்டும். எம்பி வைத்திலிங்கம் நான்காவது இடம் தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்பியாக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வந்திருக்கக் கூடாது. அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனர்.

நிச்சயமாக இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget