மேலும் அறிய

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: சௌமியா அன்புமணி

முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கிய சௌமியா அன்புமணி; தருமபுரியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பிரச்சாரம்

தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் இன்னும் 22 நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாமகவின் தர்மபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி, முன்னாள் அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குக் கேட்டார்.

தொடர்ந்து சௌமியா அன்புமணி பேசியதாவது:

தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். எனவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை

தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அடிப்படை குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்த வேண்டி உள்ளன.

தர்மபுரி மாவட்டத்திற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய தேவை உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம், சிப்காட் தொழிற்சாலைகள் ஆகியவை கொண்டு வந்து தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டிய தேவை உள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்

இவை அனைத்தையும் நிறைவேற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கூட்டணிக் கட்சிகள் அனைவரும் மிக ஒற்றுமையாக சேர்ந்து உழைத்தால் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம்’’.

இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Embed widget