மேலும் அறிய
Advertisement
திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
திருப்பத்தூர் அடுத்த ஈத்கா ரோடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2024 திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் திமுக சார்பில் சி.என் அண்ணாதுரை போட்டியிடுகிறார். அதன் காரணமாக இன்று திருப்பத்தூருக்கு வருகை புரிந்து சி.என் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணாநகர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது திமுக முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அடுத்த ஈத்கா ரோடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,ஜோலர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்,
திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன்மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion