மேலும் அறிய

4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவும், தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் நேரமும் கால அளவும்

2003-ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்கள்) விதி 12-இன் துணை விதி (2)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (TASMAC) மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்படும்.

வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக, அதாவது 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12:00 மணி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 04.05.2026 (திங்கட்கிழமை) அன்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களுக்குத் தற்காலிக விடுமுறை அளிக்கப்படுகிறது.

உரிமம் பெற்ற வளாகங்களுக்குக் கட்டுப்பாடு

FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து தனியார் மதுபானக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் மற்றும் கிளப்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்தத் தடைக்காலங்களில் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானங்களைப் போக்குவரத்து செய்யவோ (Liquor Transport) முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை மீறி, மறைமுகமாகவோ அல்லது கள்ளத்தனமாகவோ மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களின் உரிமையாளர்கள் இந்த விதியை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.

தேர்தல் காலத்தில் மதுவினால் ஏற்படும் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைத் தவிர்க்கவும், வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலுமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினரால் கண்காணிக்கப்படும் என்றும், பறக்கும் படையினர் இது குறித்துத் தீவிரச் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Embed widget