மேலும் அறிய

மயிலாடுதுறை: சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்! யார் யார் தெரியுமா? பரபரப்பு தகவல்!

சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் நாள் வேட்புமனுத் தாக்கலில், நாதக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 8 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி (தனி) மற்றும் பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் நாளான நேற்று வேட்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர். முதல் நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் உள்ள மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 8 வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களை சமர்ப்பித்தனர்.

சீர்காழி (தனி) தொகுதி நிலவரம்

160-வது தொகுதியான சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியில், முதல் நாளான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், நாம் தமிழர் கட்சியின் முதன்மை வேட்பாளராக ஆர். சுபாஷ் என்பவர் தனது மனுவை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, அதே கட்சியின் மாற்று வேட்பாளராக (Dummy Candidate) ஆர். சக்திவேல் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். தனித் தொகுதியான இங்கு முதல் நாளிலேயே அரசியல் கட்சியினர் மனுத் தாக்கல் செய்ததால் தொகுதிப் பகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மயிலாடுதுறை தொகுதி நிலவரம்

161-வது தொகுதியான மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியினரே முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், அக்கட்சியின் வேட்பாளர் கே. காசிராமன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மனுத் தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக கே. சுப்பிரமணியன் என்பவர் தனது மனுவை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், நாம் தமிழர் கட்சியினர் முதல் நாளிலேயே மனுத் தாக்கல் செய்து தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பூம்புகார் தொகுதி: சுயேச்சைகள் ஆர்வம்

162-வது தொகுதியான பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் அதிகப்படியாக 4 வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்தனர். இங்கு அரசியல் கட்சிகளை விட சுயேச்சை வேட்பாளர்கள் முதல் நாளில் ஆர்வம் காட்டினர்.

எம். மாயவெங்கடேசன், எம். மாதவன், மற்றும் டி. இன்பராஜ் ஆகிய மூவர் சுயேச்சை வேட்பாளர்களாகத் தனித்தனியே மனுத் தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சி சார்பில் கே. இளையநகுலன் என்பவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார்.

கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு மூன்று தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகங்களைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

எதிர்பார்ப்பில் அரசியல் களம்

மாவட்டத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் வேட்பாளர்கள், வரும் நாட்களில் நல்ல நேரம் பார்த்து மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல் நாளில் நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் களமிறங்கியிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் 7-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் தொடர உள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மனுத் தாக்கல் செய்ய வருவார்கள் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத் தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget