மேலும் அறிய

அமைச்சர் ரெகுலரா வாக்கிங் செய்யும் பூங்காவில், வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.. அடடே ஸ்வாரசியம் !

எங்கள் கட்சிக்காரர்களை அழைத்து, தேர்தல் பணியாற்ற அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அமைச்சர் மூர்த்தி மிரட்டிக் கொண்டு இருக்கிறார் என தகவல் வருகிறது. - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு.

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மூர்த்தி ஆட்கள், எங்களுக்கு தேர்தல் பணியாற்றுபவர்களை மிரட்டி மறைமுகத் தாக்குதல் நடத்துகிறார்கள். பணபலத்தை மட்டும் அமைச்சர் மூர்த்தி நம்பி உள்ளார். மக்கள் அமைதிப் புரட்சி நடத்தி என்னை தேர்ந்து எடுப்பார்கள். நான் ஜெயித்துச் காட்டுவேன். - அதிமுக வேட்பாளர்.

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வக்கீல் மாங்குளம் மகேந்திரன்
 
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர், அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் மாங்குளம் மகேந்திரன் இன்று தனது தொகுதிக்குட்பட்ட அய்யர் பங்களா மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகனாகுளம் பூங்காவில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த வாக்காளர்கள், தெருவோரக் கடை வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணிக் கட்சியினரும் உடன் சென்றனர்.
 
செய்தியாளர் சந்திப்பு
 
அப்போது செய்தியாளர்களிடம்...,"  வருடம் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும், 5 வருடம் அமைச்சராகவும் இருந்த மந்திரி மூர்த்தி நான் இதை செய்தேன், அதை செய்தேன் என பிதற்றுகிறாரே தவிர, இந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை. வாக்கு கேட்கும் இடங்களில், கேள்வி கேட்டால் கோபப்பட்டு வெளியேறுகிறார்.
 
வக்கீலாகிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.
 
மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமையும் போது, தொகுதியில் நடக்கும் கஞ்சா வியாபாரம் மற்றும் தீய சக்திகளின் செயல்பாடுகள் ஒழிக்கப்படும். சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக தொகுதியில் நடமாட முடியவில்லை. பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. இவை அனைத்தும் தடுக்க, வக்கீலாகிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். கஞ்சாவை ஒழிக்க தனிப்பட்ட காவல் நிலையம் அமைக்கப்படும் என அய்யா எடப்பாடியாரும் அறிவித்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் ஒழிக்கப்படும்.
 
அமைச்சர் மூர்த்தி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்
 
நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால், மதுரை மாநகராட்சி 200 கோடி ஊழல் குறித்து வழக்குத் தொடுத்து உள்ளோம். மாநகராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வரியைக் கூட்டியும், வசதியானவர்களுக்கு வரியைக் குறைத்தும் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறை செல்ல தனிக் கவனம் செலுத்தி வழக்காடுவேன். அமைச்சர் மூர்த்திக்கு எதிராக வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. எங்கள் கட்சிக்காரர்களை அழைத்து, தேர்தல் பணியாற்ற அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அமைச்சர் மூர்த்தி மிரட்டிக் கொண்டு இருக்கிறார் என தகவல் வருகிறது. ஒவ்வொருவரும் அதை மீறித்தான் வருகிறார்கள். எனக்கு வாக்கு சேகரிக்கப் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். தொகுதியில் கஞ்சாவை ஒழிக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
 
பிரச்னைகளை சொன்னால் என்னை வந்து சந்தித்தீர்களா? என கேட்கிறார்
 
தொகுதியில் மந்திரி மூர்த்தி ஆட்கள் மறைமுகத் தாக்குதல் நடத்துகிறார்கள். மக்கள் அமைதிப் புரட்சி நடத்துவார்கள். தொகுதியில் பொதுமக்களுக்கு எதையும் செய்யவில்லை. தன்னை ஆதரிக்கும் கட்சிக்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டு, இன்று பொதுஜன வாக்காளர்கள் கேள்வி கேட்டால் கோபப்படுகிறார். பிரச்னைகளை சொன்னால் என்னை வந்து சந்தித்தீர்களா? என கேட்கிறார். இவரல்லவா மக்களை இன்று சந்திப்பது போல், சென்று சந்தித்து இருக்க வேண்டும். கமிஷன் பேசிஸில் கடைசி நேரத்தில் சாலையும், குடிநீரும் கொண்டு வந்து என்ன பயன்? நான் கேட்கவில்லை. மந்திரியிடம் மக்கள் கேட்கிறார்கள்.
 
மந்திரி மூர்த்தி பண பலத்தை மட்டும் நம்பி தேர்தலில் நிற்கிறார். மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.
 
தொகுதி வாக்காளர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். சிந்திக்கிறார்கள். இரட்டை இலை அமோக வெற்றிப் பெறும். மூர்த்தியை ஜெயித்து வந்த பிறகு, அனைத்து வாக்காளர்களுக்கும் தோழனாகவும் நண்பனாகவும் அண்ணனாகவும் தம்பியாகவும் பணியாற்றுவேன். 42 வருடங்களாக வக்கீலாக இருந்து பல வழக்குகளை நடத்தி உள்ளேன். ஏழை எளிய மக்களுக்கு நிறைய செய்து உள்ளேன். யாரிடமும் கையூட்டுப் பெற்றது இல்லை. எனது மனைவி எனது கிராமத்தில் President ஆக இருந்த போது, அனைத்து வீடுகளுக்கும் குழாய் போட்டுக் கொடுத்து உள்ளேன். எந்த ஒரு வேலைக்கும் யாரிடமும் கையூட்டுப் பெற்றது இல்லை. அதை போல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டால், கையூட்டுப் பெறாமல் கமிஷன் பெறாமல் தொகுதி மக்களுக்கு அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வேன். திமுகவினர் ஒவ்வொரு வாக்காளரிடமும் OTP பெற்றதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்து நிறுத்தியவன் நான் தான்" - எனவும் தெரிவித்தார்.
 
நாகனாகுளம் பூங்கா அமைச்சர் மூர்த்தியின் வீடு அருகில் உள்ளதால், இந்த பூங்காவில் தான் அமைச்சர் வாக்கிங் செல்வார். இந்த சூழலில் அதிமுக வேட்பாளர் இதே பூங்காவிற்கு வந்தது வாக்கு சேகரித்தது ஸ்வார்சியத்தை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget