மேலும் அறிய

காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல் - திமுக பிரமுகர் மீது உறவினர்கள் புகார்

எனினும், தம்பதியினர் சென்னைக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

கடலூர் மாவட்டத்தில் திருமணம் செய்த காதல் தம்பதியினரை பெண்ணின் வீட்டாறே கார் வைத்து கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்த தனஞ்செயன் மற்றும் பாக்கியம் எனும் தம்பதியின் மகன் தாமரைக்கண்ணன் (25). சென்னையில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக பிரமுகருமான மு.அருள்முருகன் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து வந்து உள்ளார். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது. 

காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல் - திமுக பிரமுகர் மீது உறவினர்கள் புகார்

இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர், தாமரைக்கண்ணன் மகாலட்சுமி தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம் அடைந்து உள்ளனர். அதன் அடிப்படையில், வடலூர் காவல் நிலைய காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும், தம்பதியினர் சென்னைக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல் - திமுக பிரமுகர் மீது உறவினர்கள் புகார்

இவ்வாறு இருந்த சூழலில், தம்பதியினர் கடந்த 31 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கடலூர் நோக்கி வந்து உள்ளனர். அப்பொழுது அவர்களை மரக்காணம் அருகே பெண் வீட்டு தரப்பினர் மடக்கி காருடன் கடத்திச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து தாமரைக்கண்ணனின் தாயார் பாக்கியம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலவகத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக வடலூர் காவல் நிலையத்திலும் உறவினர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல் - திமுக பிரமுகர் மீது உறவினர்கள் புகார்

அதில், பெண்ணின் தந்தையும் திமுக பிரமுகர் ஆன அருள்முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதற்கு முன்னதாக, மகாலட்சுமியை காணவில்லை என்று அருள்முருகனும் புகார் அளித்தி இருந்தது குறிப்பிடத்தக்கது பின்னர் புதிதாக திருமணம் ஆன தங்களது மகனையும், மகனின் மனைவியையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என தாமரைக்கண்ணன் அவர்களின் தாயார் பாக்கியம் கோரிக்கை வைத்து உள்ளார். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதிதாக திருமணம் ஆன தம்பதியினரை மகள் வீட்டு உறவினர்களே கடத்தி இருக்கும் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget