மேலும் அறிய

PM Modi Vellore: பிரதமர் மோடி வேலூரில் இன்று பரப்புரை - பலத்த பாதுகாப்பு, போக்குவரத்தில் மாற்றம்

PM Modi Vellore: பிரதமர் மோடி வேலூரில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

PM Modi Vellore: பிரதமர் மோடி வேலூர் வருவதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை:

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள்லும் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னையில் ரோட் ஷோவில் ஈடுபட்டார். தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இந்நிலையில் இன்று அவர், வேலூர் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் வேலூர் பயணம்:

  • இன்று காலை சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்
  • கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில்,  பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்
  • அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.
  • அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
  • இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.

வேலூரில் போக்குவரத்து மாற்றம்:

பிரதமரின் வருகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 3,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதுபோக, வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

  • குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் கனரா வாகனங்கள்
    குடியாத்தம் , வடுகதாங்கல் , காட்பாடி சித்தூர் பஸ்ஸ்டாப் , EB தட்டு ரோடு ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம்  
  • திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர்  செல்லும் வாகனங்கள் சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தேனேரி, பள்ளிக்கொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாக செல்ல சித்தூர் செல்ல  வேண்டும்.
  • திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும்  கனரக வாகனங்கள் 
    சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு  ,கந்தேனேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம். 
  • சித்தூரில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்  கனரக வாகனங்கள் 
    நஹரிப்பேட்டை, EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை ஆற்காடு திமிரி ஆரணி வழியாக திருவண்ணாமலை செல்லலாம். 
  • சித்தூரில் இருந்து சென்னை செல்லும்  கனரக வாகனங்கள்  நஹரிப்பேட்டை ,EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
  • சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும்  கனரக வாகனங்கள் 
    கிறிஸ்டியன் பேட்டை காட்பாடி குடியாத்தம் ரோடு சந்திப்பு குடியாத்தம் வி கோட்டா வழியாக பெங்களூர் பயணிக்கலாம். 

மேற்கண்ட வழிகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகன நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget