மேலும் அறிய

Karnataka Election: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்..!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி  எப்போது என்ற அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி  எப்போது என்ற அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 

கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29ஆம் தேதி) காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. வரும் மே மாதத்துடன் கர்நாடக சட்டமன்றத்திற்கான பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.  அதேபோல், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே இந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வந்தது. இந்நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், கூடுதல் பரபரப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன. 

ஏற்கனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இது காங்கிரஸின் தெளிவான அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. காங்கிர்ஸுடன் கைகோர்க்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள 100 தொகுதிகளில் ஒதுக்கீடு வழங்கப்படவே இந்த நகர்வு என கூறப்படுகிறது.  

அதேபோல் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீப காலத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அதேபோல் பிரதமர் மோடியும் கர்நாடகாவில் 13.71 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை கர்நாடகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள அனைவரும் கர்நாடகாவிற்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது குறிப்பிடத்த்க்கது.  இம்முறை பெரும்பான்மையை வெல்ல அனைத்து கட்சிகளும் பெரும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Nissan 7 Seater SUV Launch: டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
Embed widget