மேலும் அறிய

Telangana Election KCR: காங்கிரஸ் - பாஜக உடன் மல்லுக்கட்டும் சந்திரசேகர ராவ்..! தெலங்கானா அரசியலில் சாதித்தது என்ன? தலைவரான வரலாறு

Telangana KCR: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் ஆனது எப்படி என்பது உள்ளிட்ட அவர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Telangana KCR: தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் அரசியல் பயணம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தெலங்கானா தேர்தல் - முக்கிய தலைவரான கேசிஆர்

ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா எனும் மாநிலம் உருவானதில் சந்திரசேகர ராவின் பங்கு அளப்பரியது.  இந்தியாவில் கடைசியாக உருவான தெலங்கானா மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற 2 தேர்தலில், வென்று அவர் முதலமைச்சரானார். இந்நிலையில் 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பில் தெலங்கானா மாநிலத்திற்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் வென்று ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ்ற்கு, முந்தைய தேர்தலில் இல்லாத அளவிற்கு நடப்பு தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றக் கூடும் என கருதப்படுகிறது. வழக்கமாக மாநிலக் கட்சிகள் எதாவது ஒரு தேசிய கட்சியை எதிர்த்து, மற்றொரு தேசிய கட்சியுடன் நட்பு பாராட்டும். ஆனால், சந்திரசேகர ராவ் இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வருகிறார். இதனால் அவர் தேசிய அளவிலும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறார். இந்நிலையில் அவர் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

சந்திரசேகர ராவ் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள்:

  • 1983ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைவதற்கு முன்பு கே.சந்திரசேகர ராவ் தனது அரசியல் வாழ்க்கையை இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். தெலங்கானா பகுதிகளுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி 2001 ஆம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகினார்.
  • தொடர்ந்து தெலங்கானா ராஷ்டிர சமிதி எனும் கட்சியை உருவாக்கினார்.  மேலும் 1960 களின் பிற்பகுதிக்குப் பிறகு பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த, தன்மாநில கோரிக்கைக்கு மீண்டும்  புத்துயிர் அளித்தார்.
  •  தெலங்கானா மாநிலம் என்று வாக்குறுதி அளித்த காங்கிரஸுடன் கைகோர்த்து, 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால்,  தெலங்கானாவை உருவாக்குவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என குற்றம்சாட்டிய அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
  • 2009ம் ஆண்டு தெலங்கானாவை உருவாக்குவதற்கு "நிபந்தனையற்ற ஆதரவை" வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி வைத்தார்.
  • நவம்பர் 2009ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
  • 11 நாட்களுக்குப் பிறகு தெலங்கானா தனி மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இருப்பினும், புதிய மாநிலம் அமைப்பதற்கு முன் கூடுதல் ஆலோசனைகள் தேவை என்று விளக்கமளிக்கப்பட்டது.
  • தெலுங்கானா மீதான சந்திரசேகர் ராவின் உறுதியான நிலைப்பாடால் தெலங்கானா மாநிலம் உருவாக,  2014ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
  • முதல் தேர்தலில் ​​அவரது கட்சி 17 மக்களவையில் 11 மற்றும் 119 சட்டமன்றத் தொகுதிகளில் 63 ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • ஜூன் 2, 2014 அன்று மதியம் 12.57 மணிக்கு தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக கே.சி.ஆர் பதவியேற்றார்.
  • ஜோதிடம், எண் கணிதம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட சந்த்ரசேக ராவ், 6 என்பதை தனது ராசியான எண்ணாக கருதுகிறார். 2023ம் ஆண்டு தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை கூட, கூட்டினால் 6 என வரும் அக்டோபர் 15ம் தேதி தான் சந்திர சேகர ராவ் வெளியிட்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget