மேலும் அறிய

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் உறுதி

திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெறுவேன் என உறுதியாக தெரிவிக்கிறேன் என இளங்கோவன் பேட்டியளித்தார்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் என்னும் மாபெரும் பிரச்சார இயக்கத்த்தை முன்னெடுப்பதும் அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் பிரச்சார இயக்கத்தின் தொடர்பான மண்டல ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலுர், சேலம் மாவட்டகளுக்கான மண்டல கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் உறுதி

இதனைத் தொடர்ந்து மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில்; 

நான் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தாலும் காங்கிரஸ் மேலிடம் சொல்லும் போது என்னால் நிற்காமல் இருக்க முடியாது. என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறையும், மத்திய அமைச்சராக ஒரு முறையும், நாடாளுமன்ற உருப்பினராகவும் ஆக்கியவர் அன்னை சோனியா காந்தி தான். அன்னை சோனியா காந்தியும்,இளம் தலைவர் ராகுல் காந்தியும் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவும் தமிழக தலைவர் அழகிரியும் நான் தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதால் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் நான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவேன் என்றும், இந்திய ஒற்றுமை நடைபயனம் சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்தி அவர்கள் சாதாரண விஷயத்தை செய்யவில்லை, மிகப்பெரிய விஷயத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றார்.

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் உறுதி

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று கொண்டிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்ல மகத்தான தியாகத்தையும் செய்து கொண்டிருக்கின்றார். பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும். மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் மீண்டும் திரும்பி இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் ராகுல் காந்தியின் நடைபயணம் தான். இந்த பயணத்தின் வெற்றியை நாம் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இளம் தலைவர் ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராகக்க வேண்டும் எனவும் பேசினார். 

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் உறுதி

அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இவிகேஎஸ் இளங்கோவன் திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்ததாகவும், காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்தேன் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய அளவிலான வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் பெறுவேன் என்பதை உறுதியாக தெரிவிப்பதாக கூறினார்.

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget