மேலும் அறிய

Eps election campaing : 210 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி உறுதி.! கோவையை மொத்தமாக கைப்பற்றுவோம் - அடித்து சொல்லும் இபிஎஸ்

Eps election campaing : கோவை, திருப்பூர், நீலகிரி என 23 தொகுதிகளில், 2021 தேர்தலில் 17 இடங்களை வென்றோம். இன்றைக்கும் அதே கூட்டணி, 23 தொகுதிகளிலும் 100க்கு 100 வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இன்று இந்தியாவே கோவையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது, தமிழகத்தில் நடக்கும் தேர்தல்.குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல். ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சி அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்திருக்கிறது. 

அதிமுகவின் வெற்றி கூட்டணி

பிரதமர் மோடி அவர்கள் உலகத் தலைவர்களால் பாராட்டும் அளவுக்கு இந்திய நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர். நம் நாட்டை எத்தனையோ பிரதமர்கள் ஆண்டுள்ளனர். ஆனால் இந்தியா நாட்டிற்கு பிரதமர் மோடி வந்த பின்னரே பெருமை அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் உழைக்கும் தலைவர் மோடி. அதிமுக, பாஜக, பாமக, அமமுக மற்றும் பல கட்சிகள் இணைந்து அற்புதமான வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது.

திமுகவின் ஐந்தாண்டு காலத்தில் 5 லட்சம் கோடி கடன் தான் சாதனை, கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். தமிழ்நாடு

23 தொகுதியையும் கைப்பற்றுவோம்

வளர்ச்சிபெற எந்த் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான நிதியும் திட்டங்களும் பெற்றோம், முதன்மை மாநிலமாக இருந்தோம். பிரதமர் எங்களின் வேண்டுகோளை ஏற்று நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு 11,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு திட்டம் கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகிறார். பிரதமர் மோடி கொடுத்த திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?

கோவை, திருப்பூர், நீலகிரி என 23 தொகுதிகளில், 2021 தேர்தலில் 17 இடங்களை வென்றோம். இன்றைக்கும் அதே கூட்டணி, 23 தொகுதிகளிலும் 100க்கு 100 வெற்றி பெறும். அதுவும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. 2021ல் 10க்கு 10 வென்றோம். ஒரு இடம் கூட திமுகவுக்குக் கிடைக்கவில்லை, திமுக ஆட்சி செய்தாலும் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக. அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்லும். 

தமிழகத்திற்கான திட்டங்கள்

கோவை, நீலகிரிக்கு பல திட்டங்கள் கொடுத்தார். ஊட்டி மற்றும் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்தவர் மோடி கோவை, நீலகிரி, திருப்பூர் ஒன்றாக இணைந்து இந்த கூட்டம் நடக்கிறது. ஊட்டி திருப்பூரில் இரண்டு மருத்துவக் கல்லூரி கொடுத்தது மத்திய அரசு. திமுகவால் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவர முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, அடித்தட்டு மக்களும் குறைந்த செலவில் உயர்கல்வி படிக்கும் சூழ்நிலையை உண்டாக்கினோம். 

210 தொகுதிகளில் வெற்றி - இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நாங்கள் இருக்கும்போதே இடம் கொடுத்தோம், ஆனால் திமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஊழல் ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த தேர்தல் திமுகவை வீழ்த்தும் தேர்தல்.

அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி, திட்டம் பெற்று தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவோம். 210 இடங்களில் நம் கூட்டணி வெல்வதற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Embed widget