மேலும் அறிய

Campaign Guidelines : இது கிடைத்தால் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி.! அதுவும் 48 மணி நேரத்திற்குள்ள- வேட்பாளர்களுக்கு EC செக்

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்ட பிராச்சாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

களத்தில் இறங்கும் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் வருகிற 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பிரச்சாரம் செய்வது, சுவரொட்டி, விளம்பர பலகை வைப்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் படி, மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட தகவலில், 

பிரச்சாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி.?

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்ட பிராச்சாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு Suvidha என்ற செயலி மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இத்தகைய விண்ணப்பங்கள் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளுதல், ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபாட் பயன்பாடு, தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல், ஒலிபெருக்கியுடன் கூட்டம் நடத்துதல்,

 எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்

ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம் நடத்துதல், ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துதல், பேரணி நடத்துதல் (Rally), சாலைக் காட்சி (Road Show) மேற்கொள்ளுதல், விளம்பரப் பதாகைகள் மற்றும் கொடிகள் (Display Banner and Flags). சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் மற்றும் கம்பத்துடன் கூடிய விளம்பரப் பலகைகள் வாகனங்கள் (Poster. Hoarding and Unipole), (Vehicle Permission)बां மாவட்டத்திற்குள் (Vehicle Permit (intra District)). ஒலிபெருக்கியுடன் வாகன அனுமதி (Vehicle with Loudspeaker Permit) நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு வாகன அனுமதி (Star campaigners and Party office bearers) உள்ளிட்டவற்றிற்கு Suvidha செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தடையில்லா சான்றிதழ் கட்டாயம்

பெறப்படும் இத்தகைய விண்ணப்பங்கள் காவல்துறை. போக்குவரத்துத் துறை. பொதுப்பணித் துறை. மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுக்கு கருத்து மற்றும் தடையில்லாச் சான்றுக்காக அனுப்பப்படும்.மேற்குறிப்பிட்ட துறைகளின் கருத்துக்கள் மற்றும் தடையின்மைச் சான்றுகளின் அடிப்படையில், தேர்தல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலி கப்பட்டு அனுமதி வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட துறைகளிடம் இருந்து தடையின்மைச் சான்று கிடைக்காத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதற்கான காரணங்களும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்படும்.

Suvidha செயலி விண்ணப்பிக்கனும்

இந்த Suvidha செயலி மூலம் இதுவரை 816 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 408 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 274 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே, தேர்தல் விதிகளின்படி Suvidha செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை அளித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget