மேலும் அறிய

Urban Localbody Election: அதிமுக, பாஜக அவுட்.. தள்ளுபடியான வேட்புமனு.. வேலூர் 8வது வார்டில் ஜெயித்த திமுக!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட சுனில் குமார் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள். பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள். பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள். திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் என மொத்தம் 180 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த பதவிகளுக் கான மனுத்தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நேற்றுவுடன் நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் 7ம் தேதி கடைசி நாள். இதையடுத்து இறுதிசைகளும் என மொத்தம் வேட்பாளர் பட்டியல் அன்று மாலையே அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Urban Localbody Election: அதிமுக, பாஜக அவுட்.. தள்ளுபடியான வேட்புமனு.. வேலூர் 8வது வார்டில் ஜெயித்த திமுக!

இந்நிலையில் 7வது நாளான நேற்று காலை 10 மணிக்கு வேட்டபுமனு தாக்கல் தொடங்கியது. இதில் வேலூர் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, பாஜக சுயேட்சை வேட்பாளர்கள் என மாநகராட்சி பகுகுதியில் மட்டும் மொத்தம் 505 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதற்கான பரிசீலனை நடைபெற்றது.

இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் ஒன்றுக்குட்பட்ட காட்பாடி பகுதியில் 8-வது வார்டில் திமுக சார்பில் சுனில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல் 8வது வார்டில் அதிமுக, பா.ம.க, பா.ஜ.க என கட்சிகளை சார்ந்த மொத்தம் 6 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் இன்று வேட்புமனுக்களுக்கான பரிசீலனை நடைப்பெற்றது. இதில் 8 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி எடுத்து பரிசீலனை செய்தார். அப்போது முதலாவதாக அதிமுக நபரின் வேட்புமனுவை எடுத்து பரிசீலனை செய்தார் அதில் பல்வேறு காரணங்களால் வேட்புமனு தள்ளுபடி செய்தார். அதே போன்று பாஜக வேட்பாளர் மற்றும் பாமக வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என மீதம் 3 வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார்‌. ஆனால் அவர்களின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் கடைசியாக திமுக வேட்பாளர் சுனில் குமாரின் மனுவை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார் அப்போது சுனில்குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்த திமுக வேட்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியே சென்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். 

Urban Localbody Election: அதிமுக, பாஜக அவுட்.. தள்ளுபடியான வேட்புமனு.. வேலூர் 8வது வார்டில் ஜெயித்த திமுக!

அதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக திமுகவை சேர்ந்த 8 வது வார்டு சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget