மேலும் அறிய

Chola Nadu TN Exit Poll Results 2021 | டெல்டாவில் அறுவடை செய்கிறதா திமுக? - ABP EXIT POLL

காவிரி டெல்டா பகுதியில் திமுக  51.8  சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது. இது 2016 தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அவர்கள் பெற்ற வாக்குச் சதவிகிதத்தை விட 12.1 சதவிகிதம் அதிகம்.  கருத்துக் கணிப்பின்படி ஆளும் அ.தி.மு.க. 33.1 சதவிகித வாக்குகளுடன் டெல்டா பகுதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 160 -172 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என ABP செய்திகள் மற்றும் சி-வோட்டர்ஸ்  நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க ஒட்டுமொத்தமாக 58 முதல் 70 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கருத்துகணிப்புச் சொல்கிறது.

மண்டல வாரியான வாக்குப் பகிர்வில் காவிரி டெல்டா பகுதி நிலவரங்கள் கவனிக்கப்பட வேண்டியது.  கிராமப்புறப்பகுதியில் 75 சதவிகிதம் பேரும் நகர்ப்புறத்தில் 21 சதவிகிதம் பேரும் இந்த மண்டலத்தில் வசிக்கிறார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உட்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் மொத்தம் 41 தொகுதிகள் உள்ளன. மேலும் மிகமுக்கியமாக இதுவரை டெல்டாவில் பெரும்பான்மை பெற்றவர்கள்தான் கோட்டையிலும் ஆட்சி அமைத்துள்ளார்கள் என்பதும் இங்கே கவனிக்கவேண்டியது. அந்த வகையில்  டெல்டாவின் 41 தொகுதிகளில் திமுக  51.8  சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது.

Chola Nadu TN Exit Poll Results 2021 | டெல்டாவில் அறுவடை செய்கிறதா திமுக? - ABP EXIT POLL

இது 2016 தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அவர்கள் பெற்ற வாக்குச்சதவிகிதத்தை விட 12.1 சதவிகிதம் அதிகம்.  கருத்துக்கணிப்பின்படி ஆளும் அ.தி.மு.க. 33.1 சதவிகித வாக்குகளுடன் டெல்டா பகுதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தப் பகுதியில் அ.தி.மு.க.வுக்கு 11.6 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. கடந்த தேர்தலில் டெல்டா பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.  இந்த முறை கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து 4.3 சதவிகித வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர கட்சிகளான நாம் தமிழர் ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை ஒட்டுமொத்தமாக வெறும் 10.8 சதவிகித வாக்குகளே பெறுகின்றன. 2016ல் இதர கட்சிகள் டெல்டா பகுதியில் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 15.6 சதவிகிதம். இத்தனைக்கும் 2016ல் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chola Nadu TN Exit Poll Results 2021 | டெல்டாவில் அறுவடை செய்கிறதா திமுக? - ABP EXIT POLL

தொகுதிகளில் வெற்றியைப் பொருத்தவரை டெல்டாவில் திமுக 32 முதல் 34 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்ற தொகுதிகளை விட 17 தொகுதிகள் அதிகம். டெல்டா பகுதியில் இந்தமுறை அதிமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. கடந்த தேர்தலில் அந்த மண்டலத்தில் 23 இடங்களில் வெற்றிபெற்றவர்கள் இந்த முறை 7-9 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமமுக கூட்டணியைப் பொருத்தவரை வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இல்லை. மற்ற எந்தக் கட்சிகளும் டெல்டாவில் வெற்றிபெற வாய்ப்பில்லை.  

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget