மேலும் அறிய

கஞ்சா போதையில் ஆசிரியரையே தாக்கிய மாணவர்; எங்கே போகிறது மாணவர் சமுதாயம்?- அன்புமணி கவலை

கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்றும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் என்னவாகின என்றும் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார். 

கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்றும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் என்னவாகின என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அன்புமணி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

''விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளைத் தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரை, மாணவர் ஒருவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

இந்த கொடுமை நிகழ்ந்த பள்ளி வள்ளலார் பெயரில் அமைந்துள்ளது. அப்பள்ளியில் 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளுக்கும் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவரே தாக்கப்பட்டுள்ளார்!

போதை மீட்பு சிகிச்சை பெற்றும் மாணவர்கள்  கஞ்சா போதைக்கு அடிமையாவதற்கு காரணம் புதுச்சேரி அரியூரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் கஞ்சா தடையில்லாமல் விற்பனை செய்யப்படுவது தான். புதுவை-தமிழக எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க இரு மாநில காவல் துறைகளும் தவறி விட்டன!

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக  போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி மாணவர்களுக்கே தடையில்லாமல் கஞ்சா கிடைக்கிறது என்பதில் இருந்தே  போதை ஒழிப்பு நடவடிக்கைகள்  பெயரளவுக்கு மட்டுமே நடக்கின்றன என்பது உறுதியாகிறது.


கஞ்சா போதையில் ஆசிரியரையே தாக்கிய மாணவர்; எங்கே போகிறது மாணவர் சமுதாயம்?- அன்புமணி கவலை

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா - போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு போதையின் தீமை குறித்து எச்சரிப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.''

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ராமச்சந்திரன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தினந்தோறும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மனநல சிகிச்சை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் விக்னேஷ் என்ற மாணவன் நேற்றைய தினம் மது போதையில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இதனையடுத்து மாணவி தலைமை ஆசிரியரிடத்தில் புகார் அளிக்கவே மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை தலையில் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் தலைமை ஆசிரியரின் பின் பக்க மண்டை பகுதியில் கிழித்து கொண்டு ரத்தம் வெளியேறியதை அடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை ஆசிரியர் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பியுள்ளார். மாணவனின் ஒழுங்கீன செயலால், மாணவனால்  தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டு மண்டையில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget