மேலும் அறிய

பொறியியல் கலந்தாய்வில் 200-க்கு 200 கட் - ஆஃப் - அசத்திய விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி

பொறியியல் கலந்தாய்வில் 200-க்கு 200 கட் - ஆஃப் வாங்கிய விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி

தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நிலையில், அதில் விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா உட்பட 133 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் - ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர 2,11,905 பேர் இணையதள வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில், 1,58,157 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்தநிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் வெளியிட்டார். முதல் 10 இடங்களை கே.ரெஞ்சிதா (கொல்லம்), எம்.ஹரினிகா (தருமபுரி), எம்.லோகேஷ் கண்ணன் (திருவள்ளூர்), எச்.அஜய் (கோவை), ஜி.கோபி (புதுக்கோட்டை), டி.பிரதீக்‌ஷா (கோவை), பி.பவித்ரா (சென்னை), ஜெ.ஹரிகுரு (நாமக்கல்), எம்.மதுபாலிகா (செங்கல்பட்டு), கே.ஷாருகேஷ் (மதுரை) ஆகியோர் பிடித்துள்ளன. அரசுப் பள்ளி பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த பி.பிருந்தா, 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆர்.எஸ்.ரோகித் (198.5), எம்.அனிதா (198) ஆகியோர் 2, 3-ம் இடங்களில் உள்ளனர்.

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 133 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் பெற்றுள்ளனர். மாணவர்கள் தரவரிசை விவரங்களை www.tneaonline.org  என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வழக்கமாக, ஒரே மாதிரி கட் ஆஃப் வந்தால் சமவாய்ப்பு (ரேண்டம்) எண் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு அதுபோன்ற நிலை இல்லாததால் ரேண்டம் எண் பயன்படுத்தப்படவில்லை. எவர் பெயரேனும் விடுபட்டிருந்தால் அதன் விவரங்களை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் அருகே உள்ள டிஎப்சி உதவி மையங்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசின் 18004250110 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவருக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தவறியவர்களும் ஆகஸ்ட் 19-க்குள் டிஎப்சி மையத்தை அணுகலாம். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது.

அரசுப்பள்ளி மாணவருக்கான 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் டிஎஃப்சி மையம் சென்று தங்களை இணைத்துக் கொள்ளலாம். 7.5% ஒதுக்கீட்டில் 10, 968 இடங்கள் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இந்தாண்டு 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலை. வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நிகழாண்டு முதல் தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கு 175 (2%) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கூறினார். உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க.லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget