மேலும் அறிய

காப்பாளர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா.. டீ கொடுத்து சமரசம் செய்த அதிகாரிகள்!

ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய வார்டன் நியாமிக்கப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவித்து தர்ணா நடந்தது

வேலூர் மாநகருக்குட்பட்ட ஆரணி செல்லும் சாலையில் ஓட்டேரியில் உள்ளது ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வரும் இளங்கலை மாணவர்கள் பயிலும் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இவ்விடுதியில் வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் தங்கி உள்ளனர். இவ்விடுதியில் கடந்த 10 ஆண்டுகளாக விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தந்துள்ளார் சண்முகம் என்பவர். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச 15) ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதா திடீரென விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது விடுதியின் காப்பாளர் சண்முகம் இல்லை என்றும், அவர் உடல் நலம் சரி இல்லை என்று வெளியே சென்றுள்ளாதாகவும் கூறப்படுகிறது.

காப்பாளர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா.. டீ கொடுத்து சமரசம் செய்த அதிகாரிகள்!

இந்நிலையில் ஆதி திராவிடர் நலத்துறை ஆணையரின் திடீர் ஆய்வின் போது விடுதி காப்பாளர் விடுதியில் இல்லாததால் விடுதி காப்பாளர் சண்முகத்தை தற்காலிக பணியிடை இடை நீக்கம் செய்து ஆணையர் மதுமிதா உத்தரவிட்டுள்ளார்‌. மேலும் அருகில் உள்ள பல்தொழில்நுட்ப மற்றும் பட்ட மேல்படிப்பு மாணவர்களுக்கான விடுதியின் காப்பாளராக உள்ள கருணாநிதி என்பவரை தற்காலிகமாக காப்பாளராக ஆதி திராவிடர் விடுதிக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே பணியாற்றிய விடுதியின் காப்பாளர் சண்முகத்தையே மீண்டும் தங்கள் விடுதி காப்பாளராக பணியமர்த்த வேண்டும் என்று விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்க்கு வந்து முற்றுகையிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காப்பாளர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா.. டீ கொடுத்து சமரசம் செய்த அதிகாரிகள்!

மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கும் படியும், தர்ணா போராட்டத்தை கை விடும்படியும் கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு காவல் துறையினரின் அறிவுரையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரில் சென்று தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நேர்முக உதவியாளர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

காப்பாளர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா.. டீ கொடுத்து சமரசம் செய்த அதிகாரிகள்!

இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுதி காப்பாளரை மாற்றக்கோரி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தனர். 

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget