TNTET: இன்றே கடைசி; டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- 4 லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம்!
TNTET 2025: ஆசிரியர் பணியில் இருப்பவர்களும் ஆசிரியர் பட்ட, பட்டயப் படிப்பை முடித்தவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.11) கடைசித் தேதி ஆகும். ஏற்கெனவே ஒருமுறை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனி நீட்டிக்கப்படாது என்றே தெரிகிறது.
நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர, டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல தனியார் பள்ளிகளும் டெட் தேர்வை அளவுகோலாக வைத்து ஆசிரியர்களைத் தேர்வு செய்கின்றன.
மாலை 5 மணி வரை அவகாசம்
இந்த நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப். 10) கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை சுமார் 4 லட்சம் தேர்வர்கள், டெட் தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர்.
ஆசிரியர் பணியில் இருப்பவர்களும் ஆசிரியர் பட்ட, பட்டயப் படிப்பை முடித்தவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களும்கூட டெட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர், இவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், படிப்பை முடித்தபின்பு டெட் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வு எப்போது?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வைப் பொறுத்தவரை, நவம்பர் 15-ம் தேதி அன்று தாள் I மற்றும், நவம்பர் 16-ம் தேதி அன்று தாள் II-ம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InVGbm1xMDJEWUhsWUxrVFdzVE5MRVE9PSIsInZhbHVlIjoiK3ZUd2VXUWVMU1pScjBPZXplc04rUT09IiwibWFjIjoiODhlZTIwYTc0Mzc3NTk1ODg0NDFlNzFlZmFiZWNiYzlkNGNlOTFhMzI5ODUxNmIyNzg0MGEzMjBlMWI0MDNkYyIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து முதல் தாளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பின்மூலம் இரண்டாம் தாளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தொலைபேசி எண்: 1800 425 6753 (காலை 10:00 முதல் மாலை 05:45 வரை அழைக்கலாம்)
முழு விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/admin/pdf/4796496415notific.pdf என்ற அறிவிக்கையைக் கண்டு, படித்து விண்ணப்பிக்கலாம்.






















