![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TNPSC Annual Planner 2024: ஜூனில் குரூப் 4 தேர்வு- ஆகஸ்ட்டில் குரூப் 2, ஜூலையில் குரூப் 1 தேர்வுகள்- டிஎன்பிஎஸ்சி முழு அட்டவணை இதோ!
ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
![TNPSC Annual Planner 2024: ஜூனில் குரூப் 4 தேர்வு- ஆகஸ்ட்டில் குரூப் 2, ஜூலையில் குரூப் 1 தேர்வுகள்- டிஎன்பிஎஸ்சி முழு அட்டவணை இதோ! TNPSC Annual Planner 2024 Group 4 Exam on June Group 2 on August Check Full TNPSC Exam Schedules Here TNPSC Annual Planner 2024: ஜூனில் குரூப் 4 தேர்வு- ஆகஸ்ட்டில் குரூப் 2, ஜூலையில் குரூப் 1 தேர்வுகள்- டிஎன்பிஎஸ்சி முழு அட்டவணை இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/193b36f26a55beb8e1c53633aa1bcd6c1703074877228332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முன்னதாக 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தேர்வு முடிவுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதில், குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு
தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. இதன் மொத்த காலி பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
65 பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் குரூப் 1 பணி இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
1294 காலி இடங்கள்
அதேபோல குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு வனத் துறையில், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் வாட்ச்சர் பணிகளுக்கு1264 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு 2024 மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ஜூன் மாதத்தில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.
இதைப் போல மொத்தம் 19 வகையான தேர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்றும் அவற்றுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீதித் துறை நீதிபதிகளுக்கான தேர்வு, வனத் துறை அலுவலர்களுக்கான தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் துறை சேவைகளுக்கான தேர்வு, உடற்கல்வி, நூலக அலுவலர்களுக்கான தேர்வு, தொல்லியல் துறை உதவி தொல்லியல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் மாதமும் தேர்வு வெளியாகும் மாதமும் கீழே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளன.
இவை தவிர்த்த கூடுதல் தகவல்களுக்கு, தேர்வர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைக் க்ளிக் செய்து விவரங்களைப் பெறலாம்.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Result Schedule: தாமதமாகும் குரூப் 1 தேர்வு முடிவுகள்; 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)