மேலும் அறிய

Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோருக்கு மறுவாய்ப்பு; எப்படி?- முழு விவரம்

முதல்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேரும் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  முதல்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி நடைபெற்றது. 

இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது. 

இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அதாவது 27ஆம் தேதி வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 1,67,387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். அதேபோல சான்றிதழ்களை 1,56,214 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை

இதற்கிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது. 

முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் 2,442 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் யாரும் டிஎஃப்சி மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சரிபார்ப்பு நிலை குறித்து தங்களுக்கு உள்ள லாகின் ஐடியில் சென்று சரிபார்க்கலாம். ஒவ்வொருக்கும் தனித்தனியாக செய்திகள் அனுப்பப்பட்டன. 

இந்நிலையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அப்போது அனைத்து அசல் விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.

மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு tneaonline.org என்ற இணையத்தை க்ளிக் செய்து பார்க்கலாம். 

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் ரேண்டம் எண்ணும் தரவரிசை பட்டியலும் வெளியாக உள்ளது.

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Embed widget