மேலும் அறிய

TN TRB Assistant Professor: ரூ.1.82 லட்சம் ஊதியம்; 4000 உதவிப் பேராசிரியர் இடங்கள்- தகுதி, வயது வரம்பு..!

TN TRB Assistant Professor Salary: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்வோருக்கு ரூ.1.82 லட்சம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும். இந்தப் பணியிடத்துக்கு ரூ.1.82 லட்சம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

இதற்கு நடத்தப்படும் தேர்வுக்கு, தேர்வர்கள் மார்ச் 28 முதல் விண்ணப்பித்து வரும் நிலையில், மே 15 (இன்று) இரவு வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

வயது வரம்பு

போட்டித் தேர்வை எழுத, உச்ச வயது வரம்பு அதிகம் இல்லை. 01.07.2024 அன்று 57 வயது நிறைவடையாத தேர்வர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்  எவ்வளவு?

உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதி

* குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுநிலைப் பட்டம் அவசியம். எனினும் எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி / டிஎன்சி / பிசி தேர்வர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.

* நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வில் அல்லது ஸ்லெட் எனப்படும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம்.

* அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6Im1LNkpYRWllbEtMS013Q2RPU2EzYXc9PSIsInZhbHVlIjoibG9WQWViTmRVY1JqMGI3UHdhT0l2QT09IiwibWFjIjoiNzI5NzIyNWU3ZGRhYTY1ZDI3ZDk4M2M1OTcyNGNhZGE4YWJhMjVkZTg2N2M3ZDdjM2I4MGY1MTU1YWE5NWE4MCIsInRhZyI6IiJ9  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* சரியான மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை அளித்து முன்பதிவு செய்யவும்.

* பிறகு, பெயர், விண்ணப்பிக்கும் பணியிடம், பாடம், பிறந்த தேதி, சமூகம், முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாக உள்ளிடவும்.

முழுமையான விவரங்களைப் பெறhttps://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free)  (10:00 am – 05:45 pm)
 
இ - மெயில் முகவரி: trbgrievances@tn.gov.dot.in

கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/ 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Embed widget