TN HSC Result 2024: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி
சேலம் மாவட்டத்தில் 160 அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7,362 பேரும், மாணவிகள் 11,184 பேரும் என மொத்தம் 18,546 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக முழுவதும் இன்று பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
சேலம் பிளஸ் 1 முடிவுகள்:
சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 17,713, மாணவிகள் 20,117 என மொத்தம் 37,830 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதி இருந்த நிலையில், 34,537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 15,509 பேரும், மாணவிகள் 19,028 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.56. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.59 என மொத்தம் 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
சேலம் மாவட்டத்தில் 160 அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 9,052 பேர், மாணவிகள் 12,130 பேர் என மொத்தம் 21,182 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் மாணவர்கள் 7,362 பேரும், மாணவிகள் 11,184 பேரும் என மொத்தம் 18,546 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு முடிவுகள்:
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 21,474 மாணவர்கள், 20,877 மாணவிகள் என 42,351 பேர் தேர்வு எழுதினர். இதில் 19,066 மாணவர்கள் 19,793 மாணவிகள் என மொத்தம் 38,859 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.79 சதவீதம் மாணவர்கள், 94.81 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 91.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 296 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 11,917 மாணவர்கள், 12,766 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 24,683 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 10,226 மாணவர்களும், 11,900 மாணவிகள் என மொத்தம் 22,126 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி 89.64 சதவீதம் ஆக உள்ளது. இந்த ஆண்டு 89.65% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 18 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள்:
சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 159 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 7,839 மாணவர்கள், 10,993 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 18,838 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 6,832 மாணவர்களும், 10,427 மாணவிகள் என மொத்தம் 17,320 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.97 ஆக உள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 91.57 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 18 ஆம் இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 94.22% தேர்ச்சி பெற்ற தமிழகத்தில் 20 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.