மேலும் அறிய

பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மதிப்பீடு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மார்ச் 2026 தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு அவகாசம் நீட்டிப்பு! மாணவர்கள் கவனத்திற்கு!

மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

மார்ச் 2026 மேல்நிலைப் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 05.06.2026 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் முதல் 16.06.2026 (செவ்வாய்க் கிழமை) வரை விடைத்தாள் நகலினை பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 12.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்க்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

503 -ENGLISH

509 - BIOLOGY

541 - MATHEMATICS

05.06.2026, 06.06.2026, 08.06.2026, 09.06.2026, 10.06.2026 மற்றும் 11.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்ய அறிவிக்கப்பட்ட பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம்.

இன்று முதல்…

மேலும், 12.06.2026 அன்று பிற்பகல் முதல் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட அனைத்து மேல்நிலைப் பொதுத்தேர்வு பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 17 வரை நீட்டிப்பு

விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்கள் 16.06.2026 க்குள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தேர்வர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 17.06.2026 (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் மற்றும் மறு கூட்டல் / மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075 / 9498383076 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget