மேலும் அறிய

TN 12th Mark Sheet: பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் மதிப்பெண் பட்டியல்; பெறுவது எப்படி?

TN 12th Mark Sheet 2025: பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவோ, இணையம் மூலமாகவே நாளை முதல் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நாளை (மே 12ஆம் தேதி) முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. இதில் மாணவ- மாணவிகள் 95.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். வழக்கம்போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரியலூர் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பெற்று இருந்தனர்.

மார்க் ஷீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

மார்ச்‌ - 2025 பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை (Statement of Marks) நாளை (12.05.2025) காலை 11.00 மணி முதல்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

இணையம் மூலம் பெறலாம், எப்படி?

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று HSE -II Year March- 2025 -Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

தனித் தேர்வர்களுக்கு எப்படி?

தனித் தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பெறலாம். தேர்வர்கள் Notification பகுதியில் சென்று HSE -II Year March- 2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் முதல் விடைத்தாள்‌ நகல்‌ 

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ நாளை 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல்‌ 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌ எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Embed widget