மேலும் அறிய

குழந்தைகளை நல்லா படிக்க வையுங்கள்... கலெக்டர் கொடுக்கும் அட்வைஸ்

கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும்.

தஞ்சாவூர்: கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். இதில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார்  வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண். விவசாயிகள் கடன் அட்டை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் கடன் உதவியாக வங்கிக் கடனுதவி பெற மகளிர் சுய உதவிக் குழுவில் அங்கம் வகிப்பதால் முன்னுரிமை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
 
பின்னர் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களையும், சிறந்த மகளிர் குழுக்களையும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) வித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் இராஜேஸ்வரி  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget