திருவண்ணாமலை : 120 மையங்களில் பொதுத்தேர்வு எழுதும் ப்ளஸ் 2 மாணவர்கள்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 120 மையங்களில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (05.05.2022) தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு துறை கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 985 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3050 பறக்கும் படையினரும், நிலையான படை உறுப்பினர்கள் 1241 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் 14 1503 மாணவர்கள் 14 ஆயிரத்து 912 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 415 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர் கடந்த சில நாட்களாக தேர்வு நடைபெறும் மையங்களில் தூய்மை பணியில் இருந்து பார்த்து கழிப்பிட வசதிகளை மேம்படுத்துதல் குடிநீர் வசதி செய்து தருதல் போன்ற பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தேர்வு பணிகளுக்காக 120 முதன்மை கண்காணிப்பாளர்கள் 125 துறை அலுவலர்கள் 29 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் ,1480 அறை கண்காணிப்பாளர்கள், 155 பறக்கும் படையினர் என மொத்தம் 1909 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பொது தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் மாணவிகளை கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். மேலும் மாணவிகள் தேர்வு எழுதும்போது பதற்றப்படாமல் யோசித்து தெளிவாக எழுத வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.மேலும் தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் வெற்றி திலகமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு முன்னதாக தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஆசிரியர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தவர்களை மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) குமார் நியமிக்கப்பட்டு தேர்வுப் பணிகளை கண்காணித்து வருகிறார்.மேலும் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெறும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்