TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூன் 28ஆம் தேதி) கடைசி ஆகும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 28ஆம் தேதி) கடைசி ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பிவிஎஸ்சி & ஏஎச் (BVSc & AH) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு நான்கரை ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு உள்ளுறைப் பயிற்சி அவசியம் ஆகும். இவை தவிர்த்து வேறுசில படிப்புகளும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
பி.டெக். – உணவுத் தொழில்நுட்பம் (B.Tech. - Food Technology)
உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும்.
பி.டெக். – கோழியினத் தொழில்நுட்பம் (BTech – Poultry Technology)
கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.
பி.டெக்.- பால்வளத் தொழில்நுட்பம் (BTech – Dairy Technology)
பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 21ஆம் தேதி 5 மணி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறிய நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க அவகாசம் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் என்ஆர்ஐ மாணவர்கள் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம் எவ்வளவு?
மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கல்லூரிகளில் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்கள் குறித்து அறிய https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Instructions/Appendix%203%20Fee%20Structure.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன், https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Instructions/UG%20DEMO%20English.mp4 என்ற இணைப்பை க்ளிக் செய்து, டெமோ வீடியோவைக் காணலாம்.
* பிறகு போதிய விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Instructions/1.%20Press%20Notification%20Tamil%20-%202024-25.pdf என்ற இணைப்பைக் க்ளிக் செய்து, தேவையான விவரங்களை அறியலாம்.
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து, விடுபட்ட சான்றிதழ்களையும் அதிலேயே பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதற்கு நாளையே (ஜூன் 28) கடைசித் தேதி ஆகும்.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.adm.tanuvas.ac.in/