TANCET 2024 Result: டான்செட், தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலை: காண்பது எப்படி?
டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேர தமிழக அளவில் நடத்தப்படும் டான்செட் தேர்வு மற்றும் எம்.இ., எம்டெக் உள்ளிட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் சீட்டா ஆகிய தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
மாணவர் சேர்க்கை
இந்தத் தேர்வின் மூலம்தான், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்ககள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத மாணவர்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு இரண்டாம் கட்டமாக மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைஒஎற்றது.
எம்பிஏ நுழைவுத் தேர்வுக்கு 24,814 பேரும் எம்சிஏ தேர்வுக்கு 9,206 பேரும் விண்ணப்பித்தனர். அதேபோல முதுகலை பொறியியல், கட்டிடவியல் மற்றும் திட்டம் (ME/ MTech/ MArch/ MPlan) ஆகிய படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 10ஆம் தேதி நடைபெறது. இந்தத் தேர்வுக்கு 5,281 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
மே மாதம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
டான்செட், சீட்டா தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான டான்செட், சீட்டா தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்குச் செல்லவும்.
- இ –மெயில் முகவரி மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்யவும்.
- லாகின் செய்து, உங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289
இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com