மேலும் அறிய

TANCET 2023: முதுகலைப் படிப்புகள்; டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி? விவரம்

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். 

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். 

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். 

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.22ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புது நுழைவுத் தேர்வு அறிமுகம்

எம்இ, எம்டெக், எம்ஆர்க் எனப்படும்  முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு இதுநாள் வரை டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. டான்செட் தேர்வுக்கும் சிஇஇடிஏ தேர்வுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு மாணவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

2022 டான்செட் தேர்வு

கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள https://tancet.annauniv.edu/tancet/Procedure%20%20for%20Online%20Registration%202023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

2023 டான்செட் தேர்வு தேதி

எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

CEETA தேர்வு 

எம்இ, எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள சிஇஇடிஏ தேர்வு அடுத்த நாள் அதாவது மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.  

கூடுதல் தகவல்களுக்கு: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
சிலம்பம் முதல் டிஜிட்டல் இதழியல் வரை: நுழைவுத் தேர்வு இல்லாமல் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு..!
சிலம்பம் முதல் டிஜிட்டல் இதழியல் வரை: நுழைவுத் தேர்வு இல்லாமல் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு..!
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!

வீடியோ

Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்; சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்; சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை நிலவரம்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Power Cut DMK Protest : விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்- ஸ்டாலினின் மெகா பிளான்
விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்- ஸ்டாலினின் மெகா பிளான்
தமிழகத்தில் மின் வெட்டு.! இது தான் லாஸ்ட்- மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
தமிழகத்தில் மின் வெட்டு.! இது தான் லாஸ்ட்- மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Quantum Energy Bziness இ ஸ்கூட்டர் வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
Quantum Energy Bziness இ ஸ்கூட்டர் வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
Embed widget